தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்க பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தனது 81வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் நேற்று கூறினார். நேற்று உலக நதிகள் தினம் கடைப்பிடிக்கப் பட்டது. அதையொட்டி, நதிகளின் பாதுகாப்பு குறித்து மோடி பேசினார். திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் 'நாகநதி' சில ஆண்டுகளுக்கு முன் வறண்டுவிட்டது. ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த 20,000 பெண்கள் நான்கு ஆண்டுகளில் 3,500 கிணறுகளை அமைத்து பெரு முயற்சி மேற்கொண்டதன் காரணமாக இன்று அந்நதியில் தண்ணீர் நிரம்பி ஓடுகிறது. படத்தில் நாக நதியை மீட்க ஆழ்கிணறுகளை அமைத்த கம்மவான்பேட்டை கிராமத்தினர். படம்: இந்திய ஊடகம்
'நதிகளை மீட்பதில் தமிழகப் பெண்கள் முன்னோடி'
1 mins read
-

