சிங்கப்பூரில் நேற்று 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,939 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஆறாவது நாளாக ஆயிரத்திற்குமேல் பதிவாகியுள்ளது.
அத்துடன், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 69 மற்றும் 97 வயதான பெண்கள் இருவர் கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டனர்.
இதனையடுத்து, சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டவர்களின் எண்ணிக்கை 78 ஆனது. கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்றால் 18 பேர் உயிரிழந்த நிலையில், இம்மாதத்தில் இதுவரை 23 பேர் இறந்துவிட்டனர்.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் 1,536 பேர் சமூகத்தினர்; 398 பேர் தங்குவிடுதி ஊழியர்கள்.
பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசிகளில் 417 பேர் 60 வயதிற்கு மேற்பட்டோர்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் ஐவர்க்குக் கிருமித்தொற்று உறுதியானது.
சிங்கப்பூரில் இதுவரை 87,892 பேரை கொரோனா தொற்றிவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இப்போது, 1,203 பேர் கிருமித்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 172 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது; 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

