சிங்கப்பூர் மக்கள்தொகை 5.45 மில்லியனாகக் குறைந்தது

சிங்கப்பூர் மக்கள்தொகை 5.45 மில்லியனாகக் குறைந்தது

1 mins read
a04ad567-75c1-4334-9f14-1505d7d8b35b
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம். -

இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி, சிங்கப்பூர் மக்கள்தொகை 5.45 மில்லியனாகக் குறைந்துவிட்டது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 4.1% குறைவு. விழுக்காட்டு அடிப்படையில் இதுவே ஆக அதிக வீழ்ச்சி எனக் கூறப்பட்டது.

சென்ற 2020ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மக்கள்தொகை 5.69 மில்லியனாக இருந்தது.

மக்கள்தொகை குறைந்திருப்பது இது மூன்றாவது முறை. இதற்குமுன் 2020ஆம் ஆண்டிலும் (0.3%) 1986ஆம் ஆண்டிலும் (0.1%) மக்கள்தொகை சரிவு கண்டிருந்தது.

சிங்கப்பூரர்கள் மக்கள்தொகை 0.7% குறைந்து 3.5 மில்லியனாக ஆனது. அதேபோல, நிரந்தரவாசிகளின் எண்ணிக்கையும் 6.2% சரிந்து, 0.49 மில்லியனாக ஆனது. அனைத்து வகை அனுமதி அட்டைகளில் இருப்போர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

உள்ளூர்வாசிகள் அல்லாதோரில், வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள் - 20%, சார்ந்திருப்போர் - 18%, இல்லப் பணிப்பெண்கள் - 16% , எம்பிளாய்மன்ட் பாஸ் - 11%, எஸ்-பாஸ் - 11% என்ற விகிதத்தில் உள்ளனர்.

கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளே மக்கள்தொகை குறைந்ததற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டாக அல்லது அதற்கும் மேலாக வெளிநாடுகளில் இருக்கும் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் சிங்கப்பூர் உள்ளூர்வாசி மக்கள்தொகையில் சேர்க்கப்படவில்லை.

புதிதாக 21,085 பேர்க்குக் குடியுரிமையும் 27,470 பேர்க்கு நிரந்தரவாசத் தகுதியும் வழங்கப்பட்டன. கடந்த 2020ஆம் ஆண்டைக் காட்டிலும் இவை குறைவு.

குறிப்புச் சொற்கள்