மக்கள்தொகை 5.45 மில்லியனுக்கு குறைந்தது

இரண்­டா­வது ஆண்­டாக சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொகை விகி­தம் குறைந்­துள்­ளது. கொவிட்-19 கொள்­ளை­நோய் நில­வ­ரம், அத­னால் விளைந்த கட்­டுப்­பா­டு­கள் ஆகி­யவை சிங்­கப்­பூர் மீது ஏற்­ப­டுத்­திய தாக்­கத்­தால் கடந்த ஓர் ஆண்­டில் என்­றும் இல்­லாத சரிவை சிங்­கப்­பூர் அதன் மக்­கள்­தொகை எண்­ணிக்­கை­யில் சந்­தித்­துள்­ளது. அர­சாங்­கத்­தின் வரு­டாந்­திர மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு அறிக்கை இத­னைத் தெரி­விக்­கிறது.

சிங்­கப்­பூ­ரின் மொத்த மக்­கள்­தொகை ஜூன் மாத நில­வ­ரப்­படி, 5.45 மில்­லி­யனுக்­குக் குறைந்­துள்­ளது. 2020ல் இந்த எண்­ணிக்கை 5.69 மில்­லி­ய­னாக இருந்­தது. இந்த 4.1% சரிவு, இது­வரை பதி­வா­கி­யுள்ள சரிவு விகி­தங்­களில் ஆக அதி­க­மா­ன­தா­கும். இத்­த­கைய சரிவு, 1950க்குப் பிறகு ஏற்­பட்­டுள்­ளது இது மூன்­றா­வது முறை என்­றும் புள்­ளி­வி­வ­ரத் துறை தரவு­கள் குறிப்­பிட்­டுள்­ளன. முன்­ன­தாக, 2020ஆம் ஆண்­டில் 0.3% சரி­வும் 1986ல் 0.1% சரி­வும் மொத்த மக்­கள்­தொ­கை­யில் பதி­வா­கி­யி­ருந்­தன.

சிங்­கப்­பூர்­வாசி அல்­லா­த­வ­ரி­டையே

அதி­க­மான சரிவு

சிங்­கப்­பூ­ரர், நிரந்­த­ர­வாசி ஆகி­யோரை உள்­ள­டக்­கிய சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் மக்­கள்­தொகை சற்று சரிந்­தி­ருந்­தா­லும் சிங்­கப்­பூர்­வாசி அல்­லா­த­வர்­க­ளி­டையே பதி­வான 10.7% சரிவு, இவ்­வாண்­டின் மக்­கள்­தொ­கைச் சரி­வுக்­குப் பெரும் கார­ண­மா­கும். ஜூன் நில­வ­ரப்­படி இவர்­க­ளின் எண்­ணிக்கை 1.47 மில்­லி­ய­னாக உள்­ளது.

கடந்த ஆண்­டில் இக்­கு­றிப்­பிட்ட பிரி­வி­ன­ரின் விகி­தம் 2.1% மட்­டுமே குறைந்­தி­ருந்­தது. இருப்­பி­னும், பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் மற்­றும் நிச்­ச­ய­மற்ற பொரு­ளி­யல் நிலை கார­ண­மாக வெளி­நாட்­டி­ன­ருக்­கான வேலை­கள் குறைந்­த­தால் இச்­ச­ரிவு பதி­வா­கி­யுள்­ள­தாக அறி­யப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர்­வாசி அல்­லாத, வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருக்­கும் அனைத்து ஊழி­யர் பிரி­வு­க­ளி­லும் இச்­ச­ரி­வைக் காண முடிந்­தது. குறிப்­பாக, கட்­டு­மா­னம், கடல் பட்­டறை மற்­றும் செயல்­மு­றைப் பொறி­யியல் துறைப் பிரி­வு­களில் வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் பெரும் சரிவு காணப்­பட்­டது.

சிங்­கப்­பூர்­வாசி அல்­லா­த­வர்­க­ளி­டையே இப்­பி­ரிவு ஊழி­யர்­கள் கிட்­டத்­தட்ட 20 விழுக்­காட்­டி­னர் ஆவர். சார்ந்­தி­ருப்­போர் 18%, வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­கள் 16% ஆகி­யோர் உள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. 'எஸ் பாஸ்' அட்டை வைத்­தி­ருப்­போர் 11 விழுக்­காட்­டி­னர்.

சிங்­கப்­பூ­ரர் எண்­ணிக்கை குறைவு

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் எண்­ணிக்கை 0.7% குறைந்து, 3.5 மில்­லி­ய­னில் உள்­ளது. நிரந்­த­ர­வா­சி­க­ளின் எண்­ணிக்கை 6.2% குறைந்து, 0.49 மில்­லி­யன் ஆகி­யுள்­ளது. 1970ஆம் ஆண்­டில் தர­வு­கள் திரட்­டப்­படத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரர், சிங்­கப்­பூர்­வாசி ஆகிய பிரி­வு­களில் ஆண்டு அடிப்­ப­டை­யாக மக்­கள்­தொகை குறைந்­தி­ருப்­பது இதுவே முதல் முறை­யா­கும்.

ஓராண்டு அல்­லது அதற்­கும் அதி­க­மான காலத்­துக்கு வெளி­நா­டு­க­ளி­லேயே தொடர்ந்து மேலும் அதிக சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் தங்க நேரிட்­ட­தால் சிங்­கப்­பூ­ரில் வசிப்­போர் மக்­கள்­தொகை­யில் சேர்க்­கப்­ப­ட­வில்லை.

அத்­து­டன் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் இரு­வ­ழிப் பய­ணங்­களை முடக்­கிய நிலை­யில், வெளி­நா­டு­களில் தங்­கி­யுள்ள சிங்­கப்­பூ­ரர்­க­ளின் எண்­ணிக்கை 2011க்குப் பிறகு ஒட்­டு­மொத்­த­மா­கக் குறைந்­தும் உள்­ளது. அடிக்­கடி பய­ணம் செய்­வோர், அதா­வது வழக்­க­மாக சிங்­கப்­பூ­ரில் வசித்­தா­லும் ஆண்­டின் பெரும்­பா­லான நாட்­களுக்கு வெளி­நாட்­டுப் பய­ணம் மேற்­கொள்­வோ­ரின் எண்­ணிக்­கை­யில் இன்­னும் அதி­கச் சரிவு காணப்­பட்­டது.

குடி­யு­ரிமை, நிரந்­த­ர­வாச உரிமை

பெற்­ற­வர் எண்­ணிக்கை குறைவு

குடி­யு­ரிமை, நிரந்­த­ர­வாச உரிமை ஆகி­ய­வற்றை 2020ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் குறை­வா­கவே வழங்­கப்­பட்­டன. 21,085 பேருக்கு சிங்­கப்­பூர் குடி­யு­ரி­மை­யும் 27,470 பேருக்கு நிரந்­த­ர­வாச உரி­மை­யும் கிடைத்­தி­ருந்­தன.

கொள்­ளை­நோ­யால் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் மட்­டு­மன்றி 'செயல்­பாட்­டுக் கட்­டுப்­பா­டு­களும்' ஏற்­பட்­ட­தாக அறிக்கை குறிப்­பிட்­டது. உதா­ர­ணத்­திற்கு, பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­படுத்­தி­ய­தால் நிரந்­த­ர­வாச, சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை கோரி விண்­ணப்­பித்த ஒரு சில­ருக்­குக் கொள்­கை­ய­ள­வில் ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­ட­போ­தும் நிரந்­த­ர­வாசி அல்­லது சிங்­கப்­பூ­ரர் ஆவ­தற்­கான முழு நடை­மு­றையை அவர்­க­ளால் பூர்த்­தி­செய்ய முடி­ய­வில்லை.

"சிங்­கப்­பூ­ரில் மூப்­ப­டை­த­லும் குறைந்த பிறப்பு விகி­த­மும் ஏற்­ப­டுத்­தும் தாக்­கத்தை குடி­நு­ழைவு அம்­சம் மட்­டுப்­ப­டுத்த உதவு­கிறது. நீண்­ட­கா­லத்­திற்கு மக்­கள்­தொகை குறை­யா­மல் இருப்­ப­தை­யும் அது உறு­தி­செய்­கிறது. தொடர்ந்து அள­வி­டப்­பட்ட, நிலை­யான முறை­யில் குடி­நு­ழைவு வேகம் அமை­யும்," என்று பிர­த­மர் அலு­வ­ல­கத்­தின்­கீழ் செயல்­படும் தேசிய மக்­கள்­தொகை மற்­றும் திறன் பிரிவு வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

மூப்­ப­டை­தல் விகி­தம் துரி­தம்

சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே மூப்­ப­டை­யும் சமூ­கம் தொடர்ந்து அதி­க­ரித்­துள்­ளது. 65 வயது மற்­றும் அதற்கு அதிக வய­து­டை­ய­வர்­கள் 2011ஆம் ஆண்­டில் 10.1 விழுக்­காட்­டி­ன­ராக இருந்­த­னர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில் இவர்­கள் 16.8 விழுக்­காட்­டி­ன­ராக இருந்­த­னர். மிக அண்­மைய அறிக்­கைப்­படி, இந்த விகி­தம் 17.6 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த பத்­தாண்­டு­க­ளைக் காட்­டி­லும் மூப்­ப­டை­யும் வேகம் மேலும் துரி­த­மா­கி­யுள்­ளது. அத்­து­டன் 1946ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை பிறந்­த­வர்­களில் அதி­க­மா­னோர், 65 வய­துக்­குப் பிந்­திய பிரி­வில் சேர்ந்­துள்­ள­தை­யும் அறிக்கை குறிப்­பிட்­டது. இவ்­வாறு 65 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டை­யோ­ரின் எண்­ணிக்கை 2030ல் கிட்­டத்­தட்ட 23.8 விழுக்­கா­டா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதற்கு மாறாக, 20 வய­துக்­கும் 64 வய­துக்­கும் இடைப்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­க­ளின் எண்­ணிக்கை 2011ல் 65.1 விழுக்­கா­டாக இருந்து, தற்­போது 61.9 விழுக்­கா­டா­கக் குறைந்­துள்­ளது. இது 2030ஆம் ஆண்­டில் ஏறத்­தாழ 56 விழுக்­கா­டாக இன்­னும் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கூடு­தல் செய்தி - பக்­கம் 2ல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!