இந்தியா: அக்டோபர் 31 வரை அனைத்துலக விமானங்களுக்குத் தடை நீட்டிப்பு

இந்தியா: அக்டோபர் 31 வரை அனைத்துலக விமானங்களுக்குத் தடை நீட்டிப்பு

1 mins read
ac49e965-fcce-49c3-bd97-c6c08d413231
ஏர் இந்தியா விமானம். படம்: இணையம் -

கொவிட்-19 சூழலைக் கருத்தில்கொண்டு, அக்டோபர் 31ஆம் தேதிவரை அனைத்துலக விமான சேவைகளுக்கான தடையை இந்தியா நீட்டித்து இருக்கிறது.

ஆயினும், அனைத்துலக சரக்கு விமான சேவைகளுக்கும் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானங்களுக்கும் இந்தத் தடை பொருந்தாது என்று பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதியில் இருந்து இந்திய அரசாங்கம் அனைத்துலக விமானப் போக்குவரத்திற்குத் தடை விதித்தது.

அதன்பின், குறிப்பிட்ட சில நாடுகளுடன் செய்துகொண்ட கொரோனா பாதுகாப்பு வளைய (Air bubble) உடன்பாட்டின்கீழ் அந்தக் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டன. கிட்டத்தட்ட 25 நாடுகளுடன் இந்தியா அந்த உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளது.

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப உதவியாக, கடந்த ஓராண்டிற்கும் மேலாக 'வந்தே பாரத்' விமான சேவைகளை இந்தியா இயக்கி வருகிறது.

குறிப்புச் சொற்கள்