இந்தியா: அக். 31 வரை அனைத்துலக விமானங்களுக்கு தடை நீட்டிப்பு

கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலைக் கருத்தில்கொண்டு, வரும் அக்டோபர் 31ஆம் தேதிவரை அனைத்துலக விமான சேவைகளுக்கான தடையை இந்தியா நீட்டித்து இருக்கிறது.

ஆயினும், அனைத்துலக சரக்கு விமான சேவைகளுக்கும் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானங்களுக்கும் இந்தத் தடை பொருந்தாது என்று பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதியில் இருந்து இந்திய அரசாங்கம் அனைத்துலக விமானப் போக்குவரத்திற்குத் தடை விதித்தது.

அதன்பின்னர், குறிப்பிட்ட சில நாடுகளுடன் செய்துகொண்ட கொரோனா பாதுகாப்பு வளைய (Air bubble) உடன்பாட்டின்கீழ் அந்தக் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டன.

கிட்டத்தட்ட 25 நாடுகளுடன் இந்தியா இத்தகைய பாதுகாப்பு வளைய உடன்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது.

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப உதவியாக, கடந்த ஓராண்டிற்கும் மேலாக 'வந்தே பாரத்' விமான சேவைகளை இந்திய அரசாங்கம் இயக்கி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!