இல்லவாசிகள் எல்லாருக்கும் பரிசோதனை; கிருமிப் பரவலைத் தடுக்க தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன தாதிமை இல்லங்களில் பரிசோதனைகள்

இல்லவாசிகள் எல்லாருக்கும் பரிசோதனை; கிருமிப் பரவலைத் தடுக்க தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன தாதிமை இல்லங்களில் பரிசோதனைகள்

2 mins read

சிங்­கப்­பூ­ரில் உள்ள தாதிமை இல்­லங்­கள் கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த, அவற்­றில் தங்­கி­யுள்­ளோர் அனை­வ­ருக்­கும் கிரு­மிப் பரி­சோ­த­னை­களை நடத்­து­வ­து­டன் ஊழி­யர்­க­ளுக்­கும் இல்­ல­வா­சி­க­ளுக்­கும் தனித்­தனி பகு­தி­களை ஒதுக்­கு­வது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றன. ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்­புக்­கான அமைப்பு இதை நேற்று தெரி­வித்­தது.

கிரு­மித்­தொற்­றால் ஏற்­பட்ட நோய்ச்­சிக்­கல்­கள் கார­ண­மாக மேலும் ஐந்து முதி­ய­வர்­கள் உயி­ரி­ழந்­த­னர் என்று சுகா­தார அமைச்சு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கூறிய நிலை­யில் இத்­த­க­வல் தெரி­விக்­கப்­பட்­டது. அத்­து­டன் மூத்­தோ­ருக்­கான நிலை­யங்­களில் கொரோனா மேலும் பர­வி­யுள்­ள­தை­யும் அமைச்சு நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

பிடோக்­கில் உள்ள மான் ஃபாட் லாம் எல்­டர்லி ஜாய் பகல்­நே­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் 11 பேருக்கு கிருமி தொற்­றி­ய­தாக அமைச்சு கூறி­யி­ருந்­தது.

பாசிர் பாஞ்­சாங்­கில் உள்ள விண்ட்­சர் தாதிமை இல்­லத்­தில் 39 பேருக்­குத் தொற்று ஏற்­பட்­ட­தா­க­வும் உட்­லண்ட்­சில் உள்ள உட்­லண்ட்ஸ் பரா­ம­ரிப்பு இல்­லத்­தில் 24 பேருக்­குத் தொற்று உண்­டா­ன­தா­க­வும் அமைச்சு கூறி­யது.

இது­வரை வாரம் ஒரு­முறை ஊழி­யர்­க­ளுக்­குப் பரி­சோ­தனை செய்­து­வந்த இங்­குள்ள தாதிமை இல்­லங்­கள், இப்­போது வாரம் இரு­முறை பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­வ­தாக ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்­புக்­கான அமைப்பு நேற்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தது. அத்­து­டன், கடந்த 27ஆம் தேதி முதல் அனைத்து இல்ல வாசி­க­ளுக்­கும் சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அமைப்பு கூறி­யது. கூடு­தல் பரி­சோ­த­னை­கள், தொற்றை முன்­கூட்­டியே கண்­ட­றி­ய­வும் சமா­ளிக்­க­வும் உத­வும் என்று அது கூறி­யது.

அத்­து­டன், இல்­ல­வா­சி­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் குறிப்­பிட்ட பகு­தி­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. அவர்­கள் தங்­க­ளுக்­கான பகு­தி­யை­விட்டு வேறு பகு­திக்­குச் செல்­லக்­கூ­டாது.

கிருமி தொற்­றி­யுள்ள இல்­ல­வா­சி­களில் பெரும்­பா­லா­னோர் சிகிச்­சைக்­கா­க­வும் அணுக்­க­மான கண்­கா­ணிப்­புக்­கா­க­வும் மருத்­துவ மனைக்­குக் கொண்டு செல்­லப் படு­வ­தாக ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்­புக்­கான அமைப்பு கூறி­யது.

தாதிமை இல்­லங்­க­ளை­விட கூடு­தல் மருத்­துவ வச­தி­க­ளை­யும் உடல்­நிலை சீராக உள்ள, அல்­லது இலே­சான நோய் அறி­கு­றி­கள் உள்­ள­வர்­க­ளைப் பரா­ம­ரிக்­கும் வச­தி­க­ளை­யும் கொண்ட சமூக சிகிச்சை நிலை­யங்­க­ளுக்­குப் பொருத்­த­மான இல்­ல­வா­சி­கள் கொண்டு செல்­லப்­ப­ட­லாம் என்று அமைப்பு கூறி­யது.

மேலும், ஒவ்­வொரு தாதிமை இல்­லத்­தி­லும் பல­த­ரப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

தாதிமை இல்­லத்­தி­னர், பொதுச் சுகா­தா­ரத் துறை­யி­னர், மருத்­துவ மனை­கள், உள்­ளிட்ட தரப்­பு­க­ளைச் சேர்ந்­தோர் இவற்­றில் இடம்­பெ­று­கின்­ற­னர். தொற்­றைக் கண்­ட­றிந்து, கட்­டுப்­ப­டுத்தி, கண்­கா­ணிக்க இவை கூட்­டாக செயல்­ ப­டு­கின்­றன.