75 முதியவர்களுக்கு கொவிட்-19 சிகிச்சை

75 முதியவர்களுக்கு கொவிட்-19 சிகிச்சை

1 mins read

சிங்­கப்­பூ­ரில் முதல் முறை­யாக தொடங்­கப்­பட்­டுள்ள கொவிட்-19 சமூக சிகிச்சை நிலை­யத்­தில் ஏறக்குறைய 75 முதி­யோர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த நிலை­யத்தை நிர்­வ­கிக்­கும் 'உட்­லண்ட்ஸ் ஹெல்த்' நிறு­வ­னத்­தின் தலைமை அதி­காரி டாக்­டர் வோங் கிர்க் சுவான் நேற்று தெரி­வித்­தார்.

கடந்த மாதம் கிருமிப் பரவல் அதிகரித்ததால் சிறப்பு சிகிச்சை நிலை­யம் அமைக்­கப்­படும் என்று செப்­டம்­பர் 19ஆம் தேதி சுகா­தார அமைச்சு அறி­வித்­தது. அதன்­படி புதிய சிகிச்சை நிலை­யம், தெம்­ப­னி­சில் உள்ள என்­டி­யுசி சுகா­தார தாதிமை இல்ல வளா­கத்­தில் தொடங்­கப்­பட்­டுள்­ளது. செப்­டம்­பர் 23ஆம் தேதி­ முதல் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­ நோயாளிகள் அங்கு அனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.

சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டதால் கொவிட்-19 சிகிச் சைக்குப் பிரத்தியேக நிலையம் தொடங்கப்பட்டது என்று டாக்டர் வோங் குறிப்­பிட்­டார்.

நாட்­பட்ட நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அல்­லது போதிய நோயெதிர்ப்பு ஆற்றல் இல்லாத வர்களுக்கு நோய்த்­தொற்­றும் அபா­யம் அதி­கம். அத்­த­கை­யோர் தொற்றால் பாதிக்­கப்­பட்­டால் இங்கு சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது என்றார் அவர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டு தீவிர சிகிச்ைச தேவைப்படு வோர் எண்ணிக்கை அண்மையில் கூடியதால் மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டது. இதனைச் சமாளிக்கும் விதமாக கொவிட்-19 சிகிச்சை நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் நிலவரப்படி கொவிட்-19 தொற்றுக்கு ஆளான 72 முதல் 90 வயது வரையிலான எட்டு முதியவர்கள் இறந்துவிட்டனர்.

அவர்கள் அனைவரும் சிங்கப் பூரர்கள். ஐவர் ஆண்கள். அவர்களில் ஆறு பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.