மலேசிய அரசு ஊழியருக்கு தடுப்பூசி கட்டாயமாகிறது

மலே­சி­யா­வில் அரசு ஊழியர் களுக்குத் தடுப்­பூசி கட்­டா­யம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அக்­டோ­ப­ரில் கொவிட்-19 கட்டுப்பா­டு­களை படிப்­ப­டி­யாக அகற்ற அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் மத்­திய அரசு ஊழி­யர்­கள் அனை­வ­ரும் தடுப்­பூசி போட வேண்­டும் அரசு கட்­டா­யப்படுத்தியுள்ளது.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், மருத்­துவ ரீதி­யாக விலக்கு அளிக்­கப்­ப­டா­த­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்கொள்ள மறுத்­தால் அவர்­கள் மீது ஓழுங்கு நட­ வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று பொதுச் சேவைப் பிரிவு எச்­ச­ரித்­துள்­ளது.

"2021 நவம்­பர் 1ஆம் ேததிக்குள் அனைத்து மத்­திய அரசு ஊழி­யர்­களும் தடுப்­பூசி போட்டு முடித்­தி­ருக்க வேண்­டும்.

"தடுப்பூசி போடாதவர்கள், அர சாங்கம் அமைத்துள்ள தடுப்பூசி நிலையங்களில் எந்த ேநரத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்," என்று நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரி வித்தது.

மலேசியாவில் இதுவரை 98 விழுக்காடு மத்திய அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

எஞ்சிய 16,902 பேருக்கு தடுப்பூசி தற்போது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!