நவம்பர் முதல் எல்லைகளைத் திறந்துவிடும் ஆஸ்திரேலியா

நவம்பர் முதல் எல்லைகளைத் திறந்துவிடும் ஆஸ்திரேலியா

2 mins read
d982b3ac-1b03-4815-a7c5-baebf614e841
-

ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் வெளி­நாடு செல்ல விதிக்­கப்­பட்ட 18 மாதத் தடை வரும் நவம்­பர் மாதத்­தில் அகற்­றப்­படும் என்று அந்­நாட்­டின் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் அறி­வித்­துள்­ளார்.

முதற்­கட்­ட­மாக, ஆஸ்­தி­ரே­லி­யர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் வெளி­நாடு செல்ல அனு­மதி அளிக்­கப்­படும். அதன்­பின், வெளி­நாட்­ட­வர்­கள் ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு வர அனு­ம­திப்­பது குறித்து அறி­விக்­கப்­படும்.

"ஆஸ்­தி­ரே­லி­யர்­க­ளுக்கு அவர்­க­ளின் வாழ்க்­கை­யைத் திருப்­பித் தரு­வ­தற்­கான நேரம் இது. நாங்­கள் உயிர்­க­ளைக் காப்­பாற்­றி­யுள்­ளோம், வாழ்­வா­தா­ரங்­களைக் காத்­துள்­ளோம். ஆயி­னும், ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் இதற்­கு­முன் இந்­நாட்­டில் தாங்­கள் வாழ்ந்த வாழ்வை மீட்­டெ­டுப்­பதை உறு­தி­செய்ய நாம் அனை­வ­ரும் இணைந்து பணி­யாற்ற வேண்­டி­யது அவ­சி­யம்," என்று திரு மோரி­சன் தெரி­வித்­துள்­ளார்.

இப்­போ­தைக்கு, முக்­கிய வர்த்­தக, மனி­தா­பி­மா­னக் கார­ணங்­களுக்­காக மட்­டுமே அங்கு உள்­ளூர்­வா­சி­கள் வெளி­நாடு செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­கிறது.

குடி­மக்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் நாடு திரும்ப அனு­ம­தி­யுண்டு. அதற்­கும் வரம்பு உண்டு. அத்­து­டன், நாடு திரும்­பு­வோர் சொந்த செல­வில் 14 நாள்­கள் ஹோட்­ட­லில் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

நேற்று அறி­விக்­கப்­பட்ட திட்­டத்­தின்­கீழ், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஆஸ்­திரேலி­யர்­கள் வெளி­நாடு செல்ல முடி­யும். அவர்­கள் நாடு திரும்­பி­ய­பின் ஏழு நாள்­கள் வீட்­டி­லேயே தங்களைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

ஆனால், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் நாடு திரும்­பி­ய­பின் தங்­க­ளது சொந்த செல­வில் 14 நாள்­கள் ஹோட்­ட­லில் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

இந்த அறி­விப்பை அடுத்து, நவம்­பர் 14ஆம் தேதி­யில் இருந்து அனைத்­து­லக விமான சேவை­களை மீண்­டும் தொடங்க குவான்­டஸ் ஏர்­வேஸ் திட்­ட­மிட்­டுள்­ளது.

இத­னி­டையே, சீனா­வின் சினோ­வேக், இந்­தி­யா­வின் கொவி­ஷீல்டு தடுப்­பூ­சி­களை ஆஸ்­தி­ரே­லியா அங்­கீ­க­ரித்து இருக்­கிறது.

இதன்­மூ­லம் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெளி­நாட்­ட­வர்­களும் வெளி­நாட்டு மாண­வர்­களும் ஆஸ்­தி­ரே­லியா செல்ல வழி பிறந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. வெளி­நாட்­டுப் பய­ணி­களை அனு­மதிப்­பது குறித்து ஆலோ­சித்து வரு­வ­தாக ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்க வட்­டா­ரங்­கள் கூறின.