4 - 5 ஆண்டுகளில் ‘பிடிஓ’ வீடு பெறலாம்

தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான காத்திருப்புக் காலம் சராசரியாக நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் என தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார். கொள்ளைநோய் ஏற்படுத்திய தாமதத்தையும் கவனத்தில் கொண்டு இந்தக் காலக்கெடு நிர்ணயிக்கப்படுவதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

"புதிய வீடுகளுக்கான காத்திருப்புக் காலம் ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகும் என சிலர் கூறுகிறார். நிலைமை அவ்வாறு இல்லை. எதிர்பாராத நிகழ்வுகள் நடக்காதபட்சத்தில், பிடிஓ வீடுகளை வாங்கியோரில் பெரும்பாலானோர் பதிவு செய்த காலத்திற்குப் பிறகு நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் புது வீட்டில் வீட்டில் குடியேறுவதை எதிர்பார்க்கலாம்," என்றார் திரு லீ.

கட்டுமானத்துறையில் கொள்ளைநோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பிடிஓ வீடுகளைக் கட்டி முடிப்பதற்கான கால மதிப்பீடு மேலும் தள்ளிப்போகிறதா என்று ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர் திருவாட்டி செரில் சான் எழுப்பிய வினாவுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

கடந்த ஆண்டும் இவ்வாண்டும் தொடங்கப்பட்ட பிடிஓ திட்டங்களுக்கான காத்திருப்பு காலம் மூன்று முதல் ஐந்தரை ஆண்டுகள் வரை என மதிப்பிடப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட 'ஹவ்காங் சிட்ரைன்' திட்டம் மூன்று ஆண்டுகளில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, பிடடாரியில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட 'அல்காஃப் பிரீஸ்' திட்டத்திற்கான காத்திருப்புக் காலம் மூன்றாண்டுகளுக்கும் சற்று அதிகம். கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட 'கார்டன் கோர்ட் @தெங்கா' திட்டத்திற்கான காத்திருப்புக் காலம் சுமார் மூன்றரை ஆண்டுகள்.

இருப்பினும், சில திட்டங்களுக்கு மேலும் அதிக காலம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்

படுகிறது. அந்த வகையில், குவீன்ஸ்டவுனில் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட 'குவீன்'ஸ் ஆர்க்' திட்டம் முடிவடைய ஐந்தரை ஆண்டு ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயரமான கட்டடங்கள், சிக்கலான கட்டுமானச் சூழல்கள் போன்றவற்றால் கட்டுமானப் பணி களுக்கு நீண்ட காலம் தேவைப்

படுவதாகவும் ஒட்டுமொத்த காத்திருப்புக் காலம் தள்ளிப்போவதற்கு இவை காரணமாக இருக்கக்கூடும் என்றும் திரு லீ தெரிவித்தார்.

தாமதத்தைக் குறைக்க வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் விரைந்து செயல்பட்டு வருகிறது.

'கிரேட்எர்த்' கட்டுமான நிறுவனம் திவால் நிலையை எட்டியதால் அந்நிறுவனம் மேற்கொண்ட திட்டங்கள் தாமதமாகிவிடக் கூடாது என்ற நோக்கில் புதிய குத்தகையாளர்களை கழகம் உடனடியாக நியமித்தது.

மேலும் கொவிட்-19 கொள்ளை நோய் கட்டுமானத் துறையில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைக் கும் வகையில் பல்வேறு நட

வடிக்கைகளையும் அது எடுத்து வருகிறது.

வீடு வாங்கி பாதிக்கப்பட்டோரை ஆதரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திரு லீ மன்றத்தில் குறிப்பிட்டார்.

மறுவிற்பனைச் சந்தை தற்போது துடிப்புடன் இயங்கும் நிலையிலும் அதிகமான பிடிஓ வீடுகள் அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போவதாலும் வீட்டு விலைகள் ஆரோக்கியமானதாக இருப்பதை தேசிய வளர்ச்சி அமைச்சு எவ்வாறு உறுதிப்படுத்தும் என்று திருவாட்டி சான் வினவினார்.

அதற்குப் பதிலளித்த திரு லீ, சொத்துத் துறை மீது அமைச்சு அணுக்க கவனம் செலுத்து

வதாகக் குறிப்பிட்டார்.

சராசரி காத்திருப்புக் காலம் குறித்து டெஸ்மண்ட் லீ விளக்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!