கொவிட்-19 கட்டுப்பாடுகளை வெறுக்கும் விமானப் பயணிகள்

கொவிட்-19 கட்டுப்பாடுகளை வெறுக்கும் விமானப் பயணிகள்

1 mins read
3e49b4a2-ba17-4bb4-8485-bda09cd414d1
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

கொவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகளால் விமானப் பயணிகள் வெறுப்படைந்து உள்ளனர்.

இப்போதே எல்லைகள் திறக்கப்பட்டு சுதந்திரமான பயணம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று பெரும்பாலாேனார் விரும்புகின்றனர். செப்டம்பர் மாத ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.

அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம், 11 வெவ்வேறு சந்தைகளில் நடத்திய ஆய்வில் 4,700 பேர் பங்கேற்றனர்.

கிருமிப் பரவலை சிறந்த நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வில் பலர் கருத்து கூறியுள்ளனர்.

பெரும்பாலான நாடுகள் எல்லைகளைத் திறக்க வேண்டும் என்பது 67 விழுக்காட்டினரின் விருப்பமாக உள்ளது. இது, கடந்த ஜூனில் நடத்தப்பட்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில் 12 விழுக்காடு அதிகம்.

எல்லைகளை மூடுவது தேவையில்லாதது என்றும் இதன் மூலம் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் 64 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். இது, ஜூன் மாத ஆய்வைவிட 11 விழுக்காடு கூடுதலாகும்.

மூன்றில் இரண்டு பங்கினர், கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகளால் தங்களுடைய வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதுவும் ஜூன் மாதத்துடன் ஒப்பிட்டால் ஆறு விழுக்காடு அதிகம்.

இந்நிலையில் ஆய்வு பற்றி பேசிய 'ஐஏடிஏ' தலைமை இயக்குநர் வில்வால்ஷ், "மக்கள் தொடர்ந்து விரக்தி அடைந்து வருகின்றனர். பயணத் தடை ஏற்படுத்திய விளைவுகளால் தங்களுடைய வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்கின்றனர், எல்லைக் கட்டுப்பாடுகள் தேைவயில்லாதது என்றும் பயணிகள் நினைக்கின்றனர்," என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்