பாகிஸ்தானில் நிலநடுக்கம்; 20 பேர் பலி; 200 பேர் காயம்

1 mins read
78219e76-e512-4316-ae98-97a387cbcc11
குவெட்டா நகரில் காயமடைந்த குழந்தையை ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

பாகிஸ்­தா­னின் பலு­சிஸ்­தான் மாநில தலை­ந­கர் குவெட்­டா­வில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலை­வில் உள்ள பல பகுதி களி­லும் நேற்று அதி­காலை திடீ­ரென நில­ந­டுக்­கம் ஏற்­பட்­ட­தில் 20 பேர் மாண்­டு­விட்­ட­னர். 200க்கும் மேற்­பட்­ட­வர்­கள் காய­ம­டைந்­த­தாக அர­சாங்க அதி­காரி­கள் தெரி­வித்­த­னர்.

பொதுமக்­கள் உறங்­கிக் கொண்­டி­ருந்த நேரத்­தில் நில­நடுக்­கம் ஏற்­பட்­ட­தால் வீடு­களின் சுவர்­களும் கூரை­களும் இடிந்து விழுந்­த­தில் பலர் கொல்­லப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவுக்கு இருந்ததாக அமெரிக்க ஆய்வு நிலையம் தெரிவித்தது. மீட்புப்பணிகள் தொடர்வதாக மாநில உள்துறை அமைச்சர் கூறினார்.