கொவிட்-19 நிலவரம் குறித்து பிரதமர் உரை - சனிக்கிழமை

1 mins read
94381eae-5a4c-45e2-b6c8-25cd0a1b48b2
-

பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூரின் கொவிட்-19 சூழல் குறித்து நாளை (சனிக்கிழமை அக்டோபர் 9ஆம் தேதி) தொலைக்காட்சி உரையை ஆற்றவிருக்கிறார்.

"கொவிட்-19 சூழல் குறித்தும் புதிய இயல்புநிலைக்கான பாதை நான் சிங்கப்பூரர்களிடம் பேசவிருக்கிறேன்," என்று அவர் இன்று வெளியிட்ட பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

"வழக்கம் போல தொடருங்கள். பொருட்களை வாங்கி சேர்த்து வைப்பதிலோ வெளியே சாப்பிடுவதிலோ அவசரம் வேண்டாம்," என்று அவர் கூறினார்.

மீடியாகார்ப் ஒளிவழிகளில் மட்டுமின்றி திரு லீயின்அ பேஸ்புக் பக்கத்திலும் அவரது உரையை நேரடியாகக் காணலாம்.