ஆப்கானிஸ்தான்: பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு

1 mins read
98f540cf-5ff9-4be3-bd72-45bdbbf9c73e
-

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாநிலமான குண்டூஸில் குண்டுவெடிப்பு நேர்ந்தது. இந்தத் தாக்குதலில் 100 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்ததாக ஐக்கிய நாடுகளின் அமைப்பு ஒன்று தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சமூகமான ஷியா முஸ்லிம் பள்ளிவாசலில் மக்களின் சடலங்களைக் காட்டும் காணொளிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளனர்.

"பள்ளிவாசலில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடந்தனர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் காட்டுகின்றன," என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியது.

இந்தச் சம்பவத்திற்கு எவரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.இதற்கு முன்னதாக அந்நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் தலிபான் அரசுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன.