சிங்கப்பூர்-தென்கொரியா: நவம்பர் 15 முதல் தனிமைப்படுத்தலின்றிப் பயணம்

முழு­மை­யாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் வரும் நவம்­பர் 15ஆம் தேதி­யில் இருந்து சிங்­கப்­பூர் - தென்­கொ­ரியா இடையே தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யின்­றிப் பய­ணம் செய்­ய­லாம்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் பய­ணம் செய்ய ஏது­வாக, தென்­கொ­ரி­யா­வு­டன் சிங்­கப்­பூர் புதிய தடுப்­பூ­சிப் பய­ணத்­தட உடன்­பாட்­டைச் செய்­து­கொண்­டுள்­ள­தாகப் போக்­கு­வ­ரத்து அமைச்சு நேற்று அறி­வித்­தது.

தடுப்­பூசி பய­ணத்­த­டத் திட்­டத்­தின்­கீழ், முழு­மை­யா­கத் தடுப்­பூ­சிப் போட்­டுக்­கொண்­ட­வர்­கள் சாங்கி விமான நிலை­யத்­திற்­கும் தென்­கொ­ரி­யா­வின் இன்ச்­சி­யோன் அனைத்­து­லக விமான நிலை­யத்­திற்­கும் இடையே பய­ணம் மேற்­கொள்­ள­லாம். அவர்­கள் 'பிசி­ஆர்' பரி­சோ­த­னை­கள் செய்­து­கொண்­டால் போது­மா­னது; தனி­மைப்­படுத்­திக்­கொள்­ளவோ வீட்­டில் தங்­கும் உத்­த­ர­வின்­கீழ் இருக்­கவோ தேவை­யில்லை.

எந்த நோக்­கத்­திற்­கா­கப் பய­ணம் செய்­கி­றோம், கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பய­ணத் திட்­டம் போன்ற கட்­டுப்­பா­டு­கள் எது­வும் இல்லை.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள், தடுப்­பூசிப் பய­ணத்­த­டத் திட்­டத்­தின்­கீழ் இங்கு வரு­வ­தற்­கு­முன் தாங்­கள் புறப்­படும் நாட்­டில் கடைசி 14 நாள்­களும் தங்­கி­யி­ருந்­தி­ருக்க வேண்­டும். தடுப்­பூ­சிப் பய­ணத்­த­டத் திட்­டத்­தின்­கீழ் இயக்­கப்­படும் பிரத்­தி­யேக விமா­னங்­க­ளி­லேயே அவர்­கள் பய­ணம் செய்ய வேண்­டும்.அவர்கள் நான்கு முறை 'பிசிஆர்' பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

முன்­ன­தாக, புரு­ணைக்­கும் ஜெர்­ம­னிக்­கும் இத்­த­கைய பயணத் திட்­டத்தை சிங்­கப்­பூர் கடந்த மாதம் அறி­வித்­தி­ருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!