சுற்றுப்பயண விசா: இந்தியா அதிரடி அறிவிப்பு

இம்­மா­தம் 15ஆம் தேதி­யி­லி­ருந்து வாடகை விமா­னங்­கள் மூல­மாக வரும் வெளி­நாட்­டி­னர்க்­கும் அடுத்த மாதம் 15ஆம் தேதி­யி­லி­ருந்து வெளி­நாட்­டி­னர் அனை­வர்க்­கும் சுற்­றுப்­ப­யண விசா வழங்­கப்­படும் என்று இந்­திய உள்­துறை அமைச்சு அறி­வித்­தி­ருக்­கிறது.

அதே நேரத்­தில், இந்­தியா செல்­லும் சுற்­றுப்­ப­ய­ணி­கள், அங்கு அறி­விக்­கப்­பட்­டுள்ள கொவிட்-19 நெறி­மு­றை­கள் அனைத்­தை­யும் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று அறி­வுறுத்­தப்­பட்­டுள்­ளது.

கொரோனா பர­வல் கார­ண­மாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் இருந்து வெளி­நாட்­டுச் சுற்­றுப்­பயணி­கள் இந்­தியா செல்ல தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் அங்கு பேரச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு கிருமித்தொற்று உயர்ந்த நிலையில், இப்போது ஒருநாள் பாதிப்பு 20,000க்கும் குறைவாகவே இருந்து வருகிறது.

இத­னை­ய­டுத்து, பொரு­ளி­ய­லில் தூணாக விளங்­கும் சுற்­று­லாத் துறையை மீண்­டும் திறக்க அனு­மதி வழங்­கும்­படி அத்­து­றை­யி­னர் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வந்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

கிரு­மிப் பர­வ­லுக்­கு­முன், இந்­தியப் பொரு­ளி­ய­லில் சுற்­று­லாத்­துறை­யின் பங்கு கிட்­டத்­தட்ட பத்து விழுக்­கா­டாக இருந்­தது. 2019ஆம் ஆண்டில் மட்டும் 10.93 மில்லியன் சுற்றுப்பயணிகள் இந்தியா வந்து சென்றதாக அந்நாட்டு அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

இந்­நி­லை­யில், இந்­தி­யச் சுற்­றுப்­பயண நிறு­வ­னங்­கள் சங்­கத்­தின் தலை­வர் ராஜீவ் மெஹ்ரா, இந்­திய அர­சின் புதிய அறி­விப்பை வர­வேற்­றுள்­ளார்.

"இந்த அறி­விப்பு சுற்­று­லாத் துறைக்கு மிகுந்த ஊக்­க­மும் நிம்­மதி­யும் அளிப்­ப­தாக அமைந்­துள்­ளது. இத­னால், உள்­நாட்­டில் சுற்­று­லாத் துறை மீண்­டும் உயிர்­பெ­றத் தொடங்­கும்," என்­றார் திரு ராஜீவ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!