பிரதமர்: அச்சமின்றி வாழ்வோம்

கொவிட்-19 சூழ­லு­டன் வாழத் தேவை­யான உத்­தி­மு­றை­களை சிங்­கப்­பூர் தொடர்ந்து கையாள வேண்­டும் எனப் பிர­த­மர் லீ சியன் லூங் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இதற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் வேளை­யில்,

மக்­க­ளின் மன­போக்­கில் மாற்­றம் ஏற்­ப­டு­வ­து மிக­வும் முக்­கி­யம் என்று அவர் நேற்று தெரி­வித்­தார். கொவிட்-19 கிரு­மியை

அலட்­சி­யப்­ப­டுத்­தக்­கூ­டாது என்று குறிப்­பிட்ட திரு லீ, அதே சம­யத்­தில் பயத்­தால் முடங்­கி­வி­டா­மல் வாழ்க்­கை­யைத் தொடர வேண்­டும் எனக் கூறி­னார்.

கொவிட்-19 சூழ­லில் சிங்­கப்­பூர் மேற்­கொள்ள இருக்­கும் பாதையை சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குத் தெரி­விக்க பிர­த­மர் லீ நேற்று நண்­ப­கல் தொலைக்­காட்­சி­யில் உரையாற்றினார். அவரது உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கொவிட்-19 கிரு­மிப் பர­வல் அறவே இல்­லாத நிலை இனி சாத்­தி­ய­மில்லை என்று திரு லீ தெரி­வித்­தார். மாறாக, நடை

முறைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­பட்டு பொது­மக்­கள் தங்­கள் அன்­றாட வாழ்க்­கை­யைக் கூடு­மான வரை தொடர வேண்­டும் என்­றார் அவர்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி

போட்­டுக்­கொண்ட பெரும்­பா­லா­னோ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று, சாதா­ரண சளி, காய்ச்­

ச­லைப்­போல சிகிச்சை அளிக்­கக்­கூ­டிய நோயா­கி­விட்­ட­தாக அவர் கூறி­னார். இருப்­பி­னும், சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே நில­வும் பதற்­றம், விரக்தி தமக்­குப் புரி­வ­தாக அவர் தெரி­வித்­தார். உத்­தி­முறை மாற்­றம் குறித்து பிர­த­மர் லீ விளக்­கம் அளித்­தார். கொவிட்-19 டெல்டா கிருமி வகை­யின் அச்­சு­றுத்­தல் நிலை­மையை மாற்­றி­விட்­ட­தாக அவர் கூறி­னார். முடக்­க­நிலை, பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்­றின் மூலம் அதை முற்­றி­லும் தடுத்­து­விட முடி­யாது என்­றார் அவர். இந்த யதார்த்த நிலை­யைப் பெரும்­பா­லான நாடு­கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளதை அவர் சுட்­டி­னார். பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் அதன் விளை­வாக அந்­நோய்க்கு எதி­ராக அவர்­க­ளது எதிர்ப்­பு­சக்தி குறை­வாக இருக்­கும் என்­றும் அவர் கூறி­னார். எனவே,

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டும்­போது மேலும் பல­ருக்­குக்

கிரு­மித்­தொற்று ஏற்­ப­டு­வது இயல்பு என்­றார் அவர். முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­படும் சாத்­தி­யம் இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும், கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் தொடர்ந்து விதிக்­கப்­பட்­டால் வர்த்­த­கங்­கள் பாதிக்­கப்­படும் என்­றும் ஊழி­யர்­கள் வேலை இழக்­கக்­கூ­டும் என்­றும் திரு லீ தெரிவித்தார். மேலும் சிறு­வர்­கள் தங்­கள் பாலர், இளம் பரு­வத்தை மகிழ்ச்சியாக அனு­ப­விக்க முடி­யா­மல் போய்­வி­டும் என்று

பிர­த­மர் லீ அக்­கறை தெரி­வித்­தார். நாட்­டின் எல்­லை­கள் திறக்­கப்­பட்டு பொரு­ளி­யல் மீண்­டும் உயிர்ப்­பிக்­கப்­படும் என்று அவர் உறுதியளித்­தார். எல்­லை­கள் மூடப்­ப­டும்­போது வெளி­நா­டு­களில் தங்­கும் குடும்ப உறுப்­பி­னர்­க­ளைப் பார்க்க முடி­யா­மல் சிங்­கப்­பூ­ரர்­கள் பலர் தவிப்­ப­தாக அவர் கூறி­னார். இத்­த­கைய நிலை சிங்­கப்­பூ­ரர்­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ஆகி­யோரை மன ரீதி­யா­க­வும் உணர்வு ரீதி­யா­க­வும் பாதிக்­கும் என்­றார் திரு லீ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!