2030க்குள் 200,000க்கும் அதிகமான கண்காணிப்புக் கேமராக்கள்

1 mins read
f43fc5fd-fa28-4523-94b1-406c3f1e645e
-

சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டுக்குள் 200,000க்கும் அதிகமான போலிஸ் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். தற்போது இந்நாட்டில் 90,000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பொது குடியிருப்பு இடங்களிலும் அக்கம்பக்க இடங்களிலும் உணவங்காடிகளிலும் இந்தக் கேமராக்கள் அமைக்கப்படும்.

2012ஆம் ஆண்டு முதல் இந்தக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 5,000க்கும் அதிகமான போலிஸ் வழக்குகளைத் தீர்த்து வைப்பதற்கு இந்தக் கருவிகள் உதவுகின்றன. கடன் முதலை நடவடிக்கைகள், திருட்டுகள் தொடர்பிலான சம்பவங்களில் கேமராக்கள், மிகுந்த செயல்திறனுடன் குற்றச்செயல்களைத் தீர்த்து வைக்க முடிவதாக துணை உதவி போலிஸ் ஆணையாளர் கென்னத் நே தெரிவித்தார். குற்றச்செயல்களைத் தடுக்கவும் இந்தக் கேமராக்கள் உதவுவதாக திரு நே கூறினார்.