இந்தியா: 12 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி

பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­தின் 'கோவேக்­சின்' தடுப்­பூ­சியை, 12 வய­துக்­குக் கீழ் உள்ள சிறார்­க­ளுக்கு அவ­ச­ர­கா­லப் பயன்­பாட்­டுக்­காக இந்­தியா பரிந்­துரை செய்­துள்­ளது. இந்­தி­யா­வில் 2 முதல் 18 வய­துப் பிரி­வி­ன­ருக்கு 'கோவேக்­சின்' தடுப்­பூ­சி­யைச் செலுத்தி, பரி­சோ­திக்­கப்­பட்­ட­தற்­கான தர­வு­களை மறு­ஆய்வு செய்­த­பின், இம்­முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

கிட்­டத்­தட்ட 1.4 பில்­லி­யன் மக்­கள்­தொகை­யில் 950 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தடுப்­பூ­சி­க­ளைப் பெரி­ய­வர்­க­ளுக்­குப் போட்­டுள்ள நிலை­யில், கொரோனா கிரு­மிக்கு எதி­ரான பாது­காப்­பைச் சிறு­வர்­களுக்­கும் அளித்­தி­டு­வ­தில் தற்­போது இந்­தியா கவ­னம் செலுத்தி வரு­கிறது.

வீரி­ய­மற்ற கொரோனா கிரு­மி­யை­யும் அதி­கப்­ப­டுத்­தப்­பட்ட நோய் எதிர்ப்பு சக்தி­யை­யும் கொண்ட 'கோவேக்­சின்', இந்­தியா­வில் பெரி­ய­வர்­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மூன்று தடுப்­பூசி வகை­களில் ஒன்­றா­கும்.

டெல்டா உரு­மா­றிய கிரு­மி­யால் ஜூன் மாதத்­தில் இரண்­டா­வது கிருமி அலை இந்­தி­யாவை வருத்த, சிறார்­க­ளி­டத்­தில் 'கோவேக்­சின்' முன்­னோட்­டத் திட்­டத்தை பாரத் பயோ­டெக் தொடங்­கி­யது. அதில் கண்­ட­றிந்­ததை மருந்­துக் கட்­டுப்­பாட்டு அமைப்­பும் நிபு­ணர்க் குழு­வும் மறு­ஆய்வு செய்து தங்­கள் தரப்பு பரிந்­து­ரை­களை வழங்­கி­யுள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னத்­தி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!