கொவிட்-19 கொள்ளைநோயால் மேலும் ஒன்பது மரணம்

கொவிட்-19 கொள்ளைநோயால் மேலும் ஒன்பது மரணம்

1 mins read
4ad95d33-d8a1-4224-84d7-1ab7cfef1907
-

சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக மேலும் ஒன்பது பேர் மரணமடைந்ததால் மொத்த மரண எண்ணிக்கை 192 ஆகக் கூடி இருக்கிறது என்று சகாதார அமைச்சு புதன்கிழமை இரவு தெரிவித்தது. அவர்கள் 52க்கும் 98க்கும் இடைப்பட்ட வயதுள்ளவர்கள். ஆறு பேர் ஆடவர்கள். மூவர் பெண்கள். ஆறு பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்.

இரண்டு பேர் ஓர் ஊசி போட்டுக்கொண்டவர்கள். ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர். அவர்களில் எட்டுப் பேருக்கு ஏற்கேனவே பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன.

கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக தொடர்ந்து 24 நாட்களாக மரணம் இடம்பெற்று வருகிறது. அக்டோபர் மாதத்தில் இதுவரை 97 பேர் மரண மடைந்துவிட்டனர்.

இதனிடையே, புதன்கிழமை புதிதாக 3,190 பேருக்குத் தொற்று ஏற்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. அவர்களில் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள் 2,686 பேர். 498 பேர் ெவளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளைச் சேர்ந்வர்கள். ஆறு பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் 553 பேர் 60க்கும் அதிக வயதுள்ள முதியவர்கள். புதிதாகக் கிருமி தொற்றியோரையும் சேர்த்து தொற்றுக்கு ஆளாவர்கள் மொத்த எண்ணிக்கை 135,395 ஆகி இருக்கிறது.