சமத்துவமின்மையை குறைக்க அழைப்பு

சமத்துவமின்மையை குறைக்க அழைப்பு

3 mins read

சிங்­கப்­பூ­ரர்­களதும் அவர்­க­ளு­டைய பிள்­ளை­க­ளதும் வாழ்க்­கைத் தரம் படிப்­ப­டி­யாக மேம்­படும் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் உறுதி அளித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சி­யின் மூலம் கிடைக்­கும் பலன் அனைத்­துப் பிரி­வி­ன­ரை­யும் சென்­ற­டை­யும் என்று அவர் தெரிவித்­துள்ளார்.

சமத்­து­வ­மின்­மை­யைக் குறைக்­க­வும் சமூக அமைப்­பில் படிப்­ப­டி­யாக மேம்­ப­டு­வ­தற்­கும் மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­க­ளுக்­காக முத­லீடு செய்­யும்­போது அடிக்­கடி செல­வு­கள் ஏற்­படுவது இயல்பு என்று

அமைச்­சர் கூறி­னார்.

செல­வு­கள் அதி­க­ரிக்­கும்­போது அதைச் சமா­ளிக்க சிங்­கப்­பூர் அதன் வரு­மான மீள்­தி­ற­னைப் பலப்­ப­டுத்த வேண்­டும் என்று திரு வோங் தெரி­வித்­தார்.

"சமத்­து­வ­மின்­மை­யைக் குறைக்க நாம் தொடர்ந்து நட­

வ­டிக்கை எடுக்க வேண்­டும். அத்­து­டன், அனைத்­துப் பிரி­வி­ன­ரும் சமூக அமைப்­பில் படிப்­ப­டி­யாக முன்­னே­றும் நிலையை மேம்­ப­டுத்த வேண்­டும். இந்த முயற்­சி­க­ளுக்­குத் தொடர்ந்து நிதி தேவைப்­படும்.

"இவற்­றுக்குச் செலவு செய்ய நிதி அமைச்சு ஒரு­போ­தும் தயக்கம் காட்­டாது. நமது மக்­க­ளின் முன்­னேற்­றத்­துக்­கும் நல்­வாழ்­வுக்­கும் தொடர்ந்து முத­லீடு செய்­யப்­படும். இது அரசாங்கம் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்த கொண்­டுள்ள கடப்­பாட்­டைக்

காட்­டு­கிறது," என்­றார் திரு வோங்.

கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற 35வது சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் கலந்­து­ரை­யா­ட­லில் சிங்­கப்­பூர் கையாள இருக்­கும் நிதி தொடர்­பான உத்­தி­மு­றை­களை மேற்­கோள்காட்­டிய திரு வோங், சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இந்த உத்­த­ர­வா­தத்­தைக் கொடுத்­தார்.

சிங்­கப்­பூர் எதிர்­நோக்­கும் முக்­கிய பொரு­ளி­யல் விவ­கா­ரங்­கள் குறித்து தனி­யார் துறை­யைச் சேர்ந்த மூத்த பொரு­ளி­யல் நிபு­ணர்­கள், கல்­வி­மான்­கள், வர்த்­த­கத் தலை­வர்­கள், கொள்கை வடி­வ­மைப்­பா­ளர்­கள் ஆகி­யோர் நிகழ்ச்சி­ யில் ஒன்­றி­ணைந்து கலந்­து­ரை­யா­டி­னர்.

நிதி தொடர்­பான கொள்­கை­களை மிகுந்த கவ­னத்­து­ட­னும் சிறப்­பா­க­வும் கையாள்­வ­தில் சிங்­கப்­பூர் இது­வரை வெற்றி கண்­டி­ருப்­பதை திரு வோங் சுட்­டி­னார்.

ஆனால் மேலும் பல சவால்­கள் காத்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார். மூன்று சவால்­களை மேற்­கோள் காட்­டிய திரு வோங், நாட்­டின் நிதி தொடர்­பான

உத்­தி­மு­றை­க­ளின் பாதையை அவை நிர்­ண­யிக்­கும் எனத் தெரி­வித்­தார்.

குறிப்­பிட்ட சில­ருக்கு மட்­டும் சாத­க­நிலை அதி­க­ரித்து அவர்­க­ளது

வாழ்க்­கைத் தரம் மட்­டுமே உய­ரும்­போது சமூக ஒரு­மைப்­பாடு நிலை­

கு­லை­யும் அபா­யம் இருப்­ப­தாக

அமைச்­சர் வோங் எச்­ச­ரித்­தார்.

வேக­மாக மூப்­ப­டை­யும் மக்­கள்­

தொ­கை­யும் கடு­மை­யான சவாலை விடுப்­ப­தாக திரு வோங் குறிப்­பிட்­டார்.

மூப்­ப­டை­யும் மக்­கள்­தொகை கார­ண­மாக ஊழி­ய­ரணி சுருங்­கு­வ­தா­க­வும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக்­கும் மூத்­தோர் பரா­ம­ரிப்­புக்­கும் தேவை அதி­க­ரிப்­ப­தா­க­வும் அவர் அக்­கறை தெரி­வித்­தார்.

மேலும், பரு­வ­நிலை மாற்­ற­மும் முகத்­துக்கு நேராக நின்று மிரட்­டல் விடுப்­ப­தாக திரு வோங் தெரி­வித்­தார்.

பரு­வ­நிலை மாற்­றத்­தால் ஏற்­படும் மிக மோச­மான பாதிப்­பு­க­ளைப் பல ஆண்­டு­கள் கழித்து உணர முடி­யும் என்­ற­போ­தி­லும் இதற்­குத் தீர்வு காண உட­னடி நட­வ­டிக்கை மிக­வும்

அவ­சி­யம் என்­றார் அவர்.

மற்ற நாடுகளைப் போலவே சமத்துவமின்மை, மக்கள்தொகை போன்ற சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூருக்குக் கூடுதல் நிதி வளங்கள் தேவைப்படும் என்று அமைச்சர் வோங் கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

மேலும் நியாயமான சமுதாயத்தை அமைப்பதே இலக்கு என்று தெரிவித்த அமைச்சர் வோங், ஒவ்வொரு பிள்ளையின் கனவும் நனவாகக்கூடிய, ஒவ்வோர் ஊழியரும் கௌரவத்துடன் வாழக்கூடிய, இடமாக சிங்கப்பூர் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

சமூகப் பின்னணி, வயது, இனம், சமயம் எதுவாக இருந்தாலும் அவர்களை ஏற்கும் சமுதாயத்தை உருவாக்குவதே இலக்கு என்றார் அமைச்சர் வோங்.