சிட்னிக்குப் பயணிகள் சேவையை அதிகரிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிட்னிக்குப் பயணிகள் சேவையை அதிகரிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

1 mins read

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து சிட்­னிக்கு சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் வாரந்­தோ­றும் விமா­னச் சேவை­களை வழங்­கு­கிறது.

இந்­நி­லை­யில், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லம் அடுத்த மாதம் அதன் அனைத்­து­லக எல்லை­ களை மீண்­டும் திறக்க இருக்கிறது.

இதனை முன்­னிட்டு நியூ சவுத் வேல்ஸ் தலை­ந­கர் சிட்­னிக்­குச் செல்­லும் அனைத்து சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னங்­க­ளி­லும் பய­ணி­கள் சேவை வழங்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தற்போது சிட்னிக்கு ஒருநாளில், பயணிகள் விமானச் சேவை ஒன்றை மட்டுமே எஸ்ஐஏ வழங்கு கிறது.

மற்ற விமா­னங்­கள் சிட்­னிக்­குச் சரக்­கு­களை

மட்­டுமே ஏற்­றிச் செல்­கின்­றன. அடுத்த மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­கும் சிட்­னிக்கும் இடையிலான அதன் வாராந்திர 17 விமானச் சேவைகளில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலியர்களும் ஆஸ்திரேலிய நிரந்தரவாசிகளும் பயணம் செய்யலாம்.