விஜயதசமி நாளில் 'முதல் எழுத்து'

விஜயதசமி நாளில் 'முதல் எழுத்து'

1 mins read
a40c085a-1247-4bfa-83e6-ce45105a41e4
சென்னையில் உள்ள ஒரு கோயிலில் நேற்று நடைபெற்ற திருஏடு தொடங்கும் நிகழ்ச்சி.படம்: இபிஏ -

நவ­ராத்­திரி விழா­வின் பத்­தா­வது நாளான விஜ­ய­த­ச­மி­யன்று தொடங்­கும் எந்த ஒரு செய­லும் வெற்றி பெறும் என்­பது இந்­துக்­க­ளின் நம்­பிக்கை. குறிப்­பாக, குழந்­தை­க­ளின் கல்­விப் பாதை­யைத் தொடங்கு ­வ­தற்கு விஜ­ய­த­சமி சிறந்த நாளா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

பொது­வாக, கோயில்­களில் திரு­ஏடு தொடங்­கும் நிகழ்ச்சி­ நடை­பெ­றும்.

குழந்­தை­க­ளின் கையைப் பிடித்­துக்­கொண்டு அவர்­க­ளது விரல்­க­ளால் நெல்லில் அல்லது அரிசியில் பெற்­றோர் எழுத வைப்­பார்­கள்.

வீடு­க­ளி­லும் இந்த 'முதல் எழுத்து' நிகழ்வு நடை­பெ­று­கிறது. நெல்லுக்குப் பதி­லாக பென்­சில், தாள் பயன்­ப­டுத்­தும் முறைக்­குப் பலர் மாறி­விட்­ட­னர்.

இந்­தி­யா­வில் மட்­டு­மில்­லாது, சிங்­கப்­பூர் உட்­பட பல நாடு­களிலும் இந்­துக்­கள் தங்­கள் குழந்­தை­க­ளின் கல்­வி­யைத் தொடங்­கி­வைக்­கும் இந்த சடங்­கிற்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் கொடுக்­கின்­ற­னர். விஜ­ய­த­சமி நாளான நேற்­றைய தினத்­தன்று குழந்­தை­கள் பலர் இந்த 'முதல் எழுத்து' நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

ஏட்டுக்கல்வியைப் போன்று, கலைகளையும் ஏனைய வித்தைகளையும் இந்த நாளில் தொடங்குவது இந்துக்களின் வழமை.