சிங்கப்பூரில் புதிதாக 3,445 பேருக்கு கொவிட்-19 தொற்று; மேலும் எண்மர் உயிரிழப்பு

சிங்கப்பூரில் புதிதாக 3,445 பேருக்கு கொவிட்-19 தொற்று; மேலும் எண்மர் உயிரிழப்பு

1 mins read
400a3a00-cea8-494d-bee7-fa1a7154e81d
பிளாசா சிங்கப்பூரா கடைத்தொகுதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் மேலும் எண்மர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) இரவு தெரிவித்தது.

இறந்தவர்கள் 61க்கும் 89 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். சிங்கப்பூரர்களான அந்த எண்மரில் எழுவர் ஆடவர்கள். அந்த எண்மரில் மூவர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். எஞ்சிய ஐவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

தொடர்ந்து 26வது நாளாக கொவிட்-19 மரணங்கள் பதிவாகின.

இதற்கிடையே, புதிதாக 3,445 பேருக்கு கொவிட்-19 உறுதியானது. சமூகத்தில் 2,823 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 620 பேரும் அடங்குவர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களில் இருவருக்கும் தொற்று உறுதியானது.