மலேசியா: முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் காலம் ஏழு நாள்களாக குறைப்பு

மலேசியா: முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் காலம் ஏழு நாள்களாக குறைப்பு

1 mins read
3f457781-4dd9-426a-9d2e-18b6fcea20a9
படம்: இபிஏ -
Google News Preferred Icon

கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் திங்கட்கிழமையிலிருந்து (அக்டோபர் 18) மலேசியாவுக்குள் நுழையும்போது, அங்கு அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் ஏழு நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் இன்று இதனைத் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களுக்கும் இந்த ஏழு நாள் தனிமை உத்தரவு பொருந்தும். ஆனால், அத்தகையோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

தொற்று அபாயம் அதிகமுடைய நாடுகளில் இருந்து மலேசியா வருவோருக்கும் இந்த ஏழு நாள் தனிமை உத்தரவு பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்