தீபாவளி நெரிசல் குறைய ஏற்பாடு

லிட்­டில் இந்­தி­யா­வில் தீபா­வளிக் கூட்ட நெரிசலைத் தவிர்க்­கும் வகை­யில் மேம்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும் என அதி­கா­ரி­கள் அறி­வித்து உள்ளனர்.

கேம்பல் லேனும் சிராங்­கூன் ரோடும் சந்­திக்­கும் இடத்­தில் உள்ள பிரபலமான நடை­யர் கடப்­பி­டம், அக்­டோ­பர் 29ஆம் தேதி முதல் அக்­டோ­பர் 31ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் விடி­காலை 1 மணி வரையில் செயல்­ப­டாது என்று சிங்­கப்பூர் பய­ணத் துறைக் கழகம் தெரி­வித்­தது.

தீபா­வ­ளிக்கு முதல் நாளான நவம்­பர் 3ஆம் தேதி மாலை 6 மணி­யி­லி­ருந்து அடுத்த நாள் அதி­காலை 2 மணி வரை, அந்­தச் சந்­திப்­பில் நடை­யர்­கள் சாலையைக் குறுக்கே கடக்க முடி­யாது.

சுங்காய் ரோடு, டன்­லப் ஸ்தி­ரீட் ஆகி­ய­வற்­றில் செயல்­படும் இதர இரண்டு சாலை கடப்­பி­டங்­களைப் பயன்­ப­டுத்­திக்கொள்ளும் வகை­யில் பொது­மக்­கள் திருப்­பி­வி­டப்­படு­வார்­கள் என்­றும் கழ­கம் கூறி­யது. இந்த ஏற்­பாட்­டின் மூலம் ஒரே இடத்­தில் அள­வுக்கு அதி­க­மாக மக்­கள் கூடா­மல் கூட்­டத்­தைப் பர­வ­லாக்க முடி­யும்.

லிட்­டில் இந்­தி­யா­வில் செயல்­படும் கடை­களும் நிறு­வ­னங்­களும் மக்­கள் நடந்து செல்­வ­தற்­கான வழி­களில் பொருட்­களை வைத்து பாதையில் நெரிசலை ஏற்படுத்தாமல் இருப்பதை அந்­தக் கடை­களு­டன் சேர்ந்து செயல்­பட்டு கழ­கம் உறு­திப்­படுத்­தும்.

தீபா­வளி நெருங்க நெருங்க லிட்­டில் இந்­தி­யா­வில் கூட்­டம் அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த ஆண்­டும் இரவுநேரச் சந்­தை­கள் இருக்­காது.

வாடிக்கையாளர்கள் வெவ்வேறு நேரங்களில் பொருள்வாங்க வசதியாக சில கடைகள் தங்கள் வர்த்தக நேரத்தை நீட்டிப்பதாகத் தெரிவித்தன.

பல்­சுவை உணவு­கள், பாரம்­ப­ரிய பய­ணங்­கள், சமையல் திறன் விளக்கக்காட்­சி­கள், பொக்­கிஷ வேட்டை­கள், டிக்­டாக் நடன சவால் போன்ற போட்­டி­களைப் பார்­வை­யா­ளர்­கள் ரசித்து மகி­ழ­மு­டி­யும்.

இதனிடையே லிட்டில் இந்தியாவில் இடம்பெற உள்ள கூட்ட நெரிசல் தவிர்ப்பு ஏற்பாடுகள் பற்றி கருத்து கூறிய ஹரி ஓம் தையல் கடை உரிமையாளர் திருமதி ஜானகி மஹேந்திரன், 63, இந்த மாற்றம் தங்கள் தையல் கடையை அதிகம் பாதிக்காது என்றார்.

"கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம். தீபாவளி வரும், போகும். ஆனால் நமது உடல் நலத்தைக் காப்பது முக்கியம்," என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், காலில் அடிபட்டு நடப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் திரு சுப்பையா முருகன், 75, என்ற முதியவர், டன்லப் ஸ்திரீட் வரை நடந்து செல்வது சிரமமானதாக இருக்கும் என்றார்.

கூடுதல் செய்தி: இந்து இளங்கோவன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!