ஓடும் ரயிலில் பெண் சீரழிப்பு; உதவாமல் படமெடுத்த பயணிகள்

ஓடும் ரயிலில் பெண் சீரழிப்பு; உதவாமல் படமெடுத்த பயணிகள்

2 mins read

அமெ­ரிக்­கா­வில் ஃபிலடெல்­ஃபியா அருகே, கடந்த புதன்­கி­ழமை இரவு 10 மணி­ய­ள­வில், ஓடும் ரயி­லில் பெண் ஒரு­வர் பாலி­யல் வன்­கொ­டுமை செய்யப்­பட்­ட­போ­தும் சக பய­ணி­களில் ஒரு­வர்­கூட அவ­ருக்கு உதவவில்லை.

அவர்கள் யாரும் 911 அவசர எண் மூலம் தொடர்புகொள்ளவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிலாக, எட்டு நிமிடங்கள் நீடித்த அந்தக் கொடுமையைப் பய­ணி­களில் சிலர் கைபே­சி­களில் பட­மெ­டுத்­த­தா­க­ச் சொல்­லப்­ப­டு­கிறது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் ஃபிஸ்டன் எங்­கோய், 35, என்ற ஆடவர் கைதா­னார். அவர் மீது பாலி­யல் வன்­கொ­டுமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டதாக அதிகாரிகள் கூறினர்.

ரயில் ஓடிக்­கொண்டு இருந்­த­போது, பாதிக்­கப்­ப­ட்ட பெண்­ணின்­ அ­ருகே அமர்­ந்தி­ருந்த எங்­கோய், திடீ­ரென்று பெண்­ணின் ஆடை­க­ளைக் கிழித்து பலாத்காரத்தில் ­ஈடுபட்டதாகக் கூறப்­படு­கிறது.

அதற்கு முன்னதாக அந்த ஆடவர், அப்பெண்ணைச் சிலமுறை தொட முயன்றதாகவும் ஆனால் அப்பெண் ஆடவரின் கையைத் தள்ளிவிட்டு, அவரது செய்கையைத் தடுக்க முயன்றதாகவும் தென்கிழக்கு பெனிசில்வேனியா போக்குவரத்து ஆணையம் என்ற அமைப்பின் பேச்சாளரான ஆண்ட்ரு புஷ்ச் விளக்கம் அளித்தார்.

தற்­செய­லாக அந்த ரயில் பெட்­டி­யில் நுழைந்த போக்­கு­வ­ரத்து ஆணைய அதி­காரி ஒரு­வர் எங்­கோயை போலி­சார் உத­வி­யு­டன் பிடித்­துக்­கொ­டுத்­தார்.

இதுபற்றி கருத்துத் தெரி­வித்த திமத்தி பெர்ன்­ஹார்ட் என்ற காவல்­துறை உய­ர­தி­காரி, "அப்பெண்ணுக்கு ஒருவரும் உதவாதது மனம் வருந்தச் செய்கிறது," என்றார்.

"அந்­நே­ரத்­தில் அந்த ரயில் பெட்­டி­யில் இருந்­த­வர்­கள், ஏன் அந்த மாபாத­க­னைத் தடுக்­க­வில்லை, அந்தப் பெண்­ணுக்கு உத­வ­வில்லை என்பதைத் தங்­களைத் தாங்களே கண்­ணா­டி­யில் பார்த்து கேட்­டுக்­கொள்ள வேண்­டும்," என்­று அவர் கோபத்தடன் கூறினார்.

உதவ முன்­வ­ரா­த­போ­தும் அந்தக்­கொடுமையைப் பட­மெ­டுத்­தோர்­மீது குற்­ற­வி­யல் வழக்கு பதி­வு­செய்­யப்­படும் என்று திரு பெர்ன்­ஹார்ட் தெரி­வித்­து உள்­ளதாக தகவல்கள் குறிப்பிட்டன.