கொரோனா பாதிப்பு 150,000ஐத் தாண்டியது

கொரோனா பாதிப்பு 150,000ஐத் தாண்டியது

1 mins read
07fdcd0b-77c5-4904-bd2f-ef89b0fe75a4
விடுதிகளில் இருக்கும் 544 வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட மேலும் 2,553 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நேற்று திங்கட்கிழமை புதிதாக 2,553 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 150,731ஆக உயர்ந்தது.

புதிதாகக் கிருமி தொற்றியோரில் 2,008 பேர் சமூகத்தில் இருப்பவர்கள், 544 பேர் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள், ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்.

இதனிடையே, ஆடவர் நால்வர், பெண்கள் இருவர் என மேலும் அறுவர் கிருமித்தொற்றால் உயிரிழந்துவிட, மாண்டோர் எண்ணிக்கை 239 ஆனது.

78 முதல் 93 வயதிற்குட்பட்ட அவர்களில் நால்வர் தடுப்பூசி போட்டிருக்கவில்லை. எஞ்சிய இருவரில் ஒருவர் முழுமையாகவும் இன்னொருவர் முதல் தவணை மட்டும் தடுப்பூசி போட்டிருந்தனர்.

நேற்று திங்கட்கிழமை நிலவரப்படி, 15,132 கொரோனா நோயாளிகள் வீட்டிலிருந்தபடியே குணமடைந்து வருகின்றனர். 3,209 பேர் சமூகப் பராமரிப்பு நிலையங்களிலும் 858 பேர் கொவிட்-19 சிகிச்சை மையங்களிலும் தேறி வருகின்றனர்.

மருத்துவமனைகளில் 1,714 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 337 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது; 67 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
கொவிட்-19கிருமித்தொற்று

தொடர்புடைய செய்திகள்