சுகாதார ஊழியர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கலாம்

1 mins read
bad0f034-f64b-4f48-895c-4b397d1c7079
செங்காங் பொது மருத்துவமனையில் சுகாதார ஊழியர்கள் இருவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எல்லா சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் வெளிநாடு செல்ல விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களின் வெளிநாட்டுப் பயண விடுப்பு விண்ணப்பங்களுக்கு இனி தடை இருக்காது. அந்தத் தற்காலிகத் தடையை சுகாதார அமைச்சு நீக்கியுள்ளது.

இதன் காரணமாக சில மருத்துவர்களுக்கும் தாதியருக்கும் நிம்மதி கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட ஈராண்டுக்கும் மேலாக நீண்ட நேரம் வேலை செய்ததோடு தங்களின் அன்புக்குரியவர்களைப் பிரிந்திருக்கும் நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டது.

விண்ணப்பத் தடை நீக்கப்பட்ட விவரத்தை சிங்கப்பூரில் உள்ள பொது சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பான எம்ஓஎச் ஹோல்டிங்ஸ் இன்று செவ்வாய்க்கிழமை தனது சுற்றறிக்கையில் தெரிவித்தது.

"கொவிட்-19 தொடர்பான விதிமுறைகளை அண்மையில் அரசாங்கம் நெறிப்படுத்தி உள்ளது. மேலும். விடிஎல் எனப்படும் தடுப்பூசி போட்டவர்களுக்கான சிறப்பு பயண எற்பாடும் அக்டோபர் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

"இவற்றின் அடிப்படையில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கான வெளிநாட்டுப் பயண வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்தது," என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்