சுகாதார ஊழியர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கலாம்

சுகாதார ஊழியர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கலாம்

2 mins read

எல்லா சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் வெளிநாடு செல்ல விண்ணப்பிக்க அனுமதிக்கப்

படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களின் வெளிநாட்டுப் பயண விடுப்பு விண்ணப்பங்களுக்கு இனி தடை இருக்காது. அந்தத் தற்காலிகத் தடையை சுகாதார அமைச்சு நீக்கியுள்ளது.

இதன் காரணமாக சில மருத்துவர்களுக்கும் தாதியருக்கும் நிம்மதி கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட ஈராண்டுக்கும் மேலாக நீண்ட நேரம் வேலை செய்ததோடு தங்களின் அன்புக்குரியவர்களைப் பிரிந்திருக்கும் நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டது.

விண்ணப்பத் தடை நீக்கப்பட்ட விவரத்தை சிங்கப்பூரில் உள்ள பொதுச் சுகாதாரப் பரா

மரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பான எம்ஓஎச் ஹோல்டிங்ஸ் நேற்று தனது சுற்றறிக்கையில் தெரிவித்தது.

"கொவிட்-19 தொடர்பான விதிமுறைகளை அண்மையில் அரசாங்கம் நெறிப்படுத்தி உள்ளது. மேலும், விடிஎல் எனப்படும் தடுப்பூசி போட்டவர்களுக்கான சிறப்பு பயண எற்பாடும் அக்டோபர் 9 முதல் நடைமுறைப்

படுத்தப்பட்டுள்ளது.

"இவற்றின் அடிப்படையில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்

களுக்கான வெளிநாட்டுப் பயண வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்தது," என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடிஎல் ஏற்பாடு என்பது முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் தனித்

திருக்க வேண்டிய அவசியமின்றி 11 நாடுகளுக்குச் செல்லலாம்.

எனினும் அவர்கள் தங்களது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னரும் பயணத்தை முடித்த பின்னரும் கொவிட்-19 தொற்றுக்கான பிசிஆர் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

அவ்வாறு பயணம் செய்யக்கூடிய பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், தென்

கொரியா, நெதர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், கனடா, புருணை ஆகிய நாடுகள் உள்ளன.

"எல்லா வெளிநாட்டுப் பயணங்களும் நடப்பில் உள்ள சுகாதார அமைச்சின் பயண ஆலோசனை மற்றும் குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையத்தின் இணையத்தளத்தில் காணப்படும் தேசிய பயண சுகாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்தது," என எம்ஓஎச் ஹோல்டிங்ஸ் கூறியது.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் தங்களது தடுப்பூசி நிலையைத் தெரிவிப்பது அவசியம் என்று அது குறிப்பிட்டுள்ளது. மேலும், தாங்கள் செல்லக்கூடிய நாடு, நகரம் போன்ற விவரங்களை அவர்கள் தங்களது ஆண்டு விடுப்பு விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் எம்ஓஎச் ஹோல்டிங்ஸ் வலியுறுத்தி உள்ளது.

இதற்கிடையே, தங்களது குழுமத்தின் மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைவருக்கும் எல்லா பயணத் தடைகளையும் நீக்கிவிட்டதாக ஐஎச்எச் ஹெல்த் கேர் குழுமத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் பிரேம் குமார் நாயர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் ஆர்ச்சர்ட், மவுண்ட் எலிசபெத் நொவினா, கிளனிகல்ஸ் மருத்துவமனை, பார்க்வே ஈஸ்ட் மருத்துவமனை ஆகியவற்றை ஐஎச்எச் சுஹெல்த்கேர் குழுமம் நிர்வகிக்கிறது.

"எங்களது நோயாளிகளைப் பராமரிக்க கடந்த 20 மாதங் களுக்கும் மேலாக தங்களது உறவுகளைப் பிரிந்து, அர்ப்பணிப்பு டன் பணியாற்றிய எல்லா வெளி நாட்டு மருத்துவ ஊழியர்களுக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கி றோம்," என்றார் அவர்.

கிட்டத்தட்ட ஈராண்டாக நீண்டநேரம் பணியாற்றிய மருத்துவர்களுக்கும் தாதியருக்கும் நிம்மதி