கொவிட்-19 : மேலும் எழுவர் பலி

கொவிட்-19 : மேலும் எழுவர் பலி

1 mins read
6737d770-b769-41c9-83a6-b13bac2c21b2
-

சிங்கப்பூரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நெருக்குதலை எதிர்நோக்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் 71 நோயாளிகள் உள்ளனர். திங்கட்கிழமையின்போது இந்த எண்ணிக்கை 67 ஆக இருந்தது.

கிருமித்தொற்று தொடர்பான உடல்நலச் சிக்கல்களால் ஏழு சிங்கப்பூரர்கள் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இந்த மரணங்களுடன் சிங்கப்பூரின் கொவிட்-19 மரண எண்ணிக்கை 246க்கு உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரில் மூவருக்குத் தடுப்பூசி முற்றிலும் போடப்படவில்லை. ஒருவருக்கு முதல் தடுப்பூசி மட்டும் போடப்பட்டிருந்தது. மற்ற மூவருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தது.

புதிதாக 3,994 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது புதிதாக பாதிக்கப்பட்டோரில் 3,48 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 501 பேர் ஊழியர் தங்கும் இடத்தைச் சேர்ந்தவர்கள். 13 பேர் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டு இங்கு வந்தவர்கள்.