‘ஊழியர் தங்குவிடுதியில் கொவிட்-19 நெறிமுறைகளை அமல்படுத்துவதில் குளறுபடி’

கொவிட்-19 இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட ஊழியர்களை, அவர்கள் தங்கியிருந்த வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியிலிருந்து பராமரிப்புக்காக வேறு இடத்திற்கு மாற்றுவதில் தடை ஏற்பட்டது. இந்தத் தடைக்குப் பல அம்சங்களில் குறைபாடு இருந்ததே காரணம் என்று வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் இன்று தெரிவித்தது.

பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் தொடர்பான புதிய நெறிமுறைகளை அமல்படுத்துவதில் குளறுபடி, பராமரிப்பு வளாகங்களுக்கு மாற்றுவதில் தளவாட மற்றும் மனிதவளச் சவால்கள், தங்குவிடுதிவாசிகளுக்கிடையே எதிர்பாராத விதமாக பதிவான அதிகளவு தொற்று எண்ணிக்கை போன்றவற்றைக் குறிப்பிட்டார் நிலையத்தின் தலைவர் இயோ குவாட் குவாங்.

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை, தங்குவிடுதியிலிருந்து தகுந்த பராமரிப்பு வளாகங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கடந்த வாரம் புகார்கள் வந்தன. கடந்த புதன்கிழமையன்று ஊழியர்கள் அனைவரும் தங்களது குமுறல்களைக் கூறுவதற்காக ஒன்றுதிரண்டனர். அவ்விடத்திற்கு கலகத்தடுப்புப் படையினரும் அனுப்பப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட தங்குவிடுதிக்குக் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தைச் சேர்ந்த குழுவும் கப்பல் கட்டுதல் மற்றும் கடல் பொறியியல் ஊழியர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் சென்றிருந்தனர்.
தங்குவிடுதியில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டனவா, விடுதிவாசிகளின் உடல்நல, மனநலன் எவ்வாறு உள்ளது போன்றவற்றைக் கண்டறிய இக்குழு சென்றிருந்தது.

உள்ளூர் ஊடகங்களில் தங்குவிடுதி நிலவரம் குறித்து செய்திகள் வெளிவந்ததை அடுத்து ஊழியர்களுக்கு ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் பெரும்பாலும் மறுநாளே தீர்க்கப்பட்டதாக திரு இயோ குறிப்பிட்டார்.

“நிலைமை மேம்படுத்தப்பட்டதை அடுத்து, கொவிட்-19 இருப்பதாக உறுதிசெய்யப்படுவோரை இடம் மாற்றும் செயல்முறை குறித்த நேரத்தில் நடப்பதாக விடுதிவாசிகள் எங்களிடம் கூறினர். இந்தச் சுமுக செயல்முறை தொடரவேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் கூறினர்,” என்றார் அவர்.
இதற்கிடையே, தங்குவிடுதியில் உள்ள ஊழியர்கள் சிலருக்குப் புதிய பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் மற்றும் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் நெறிமுறைகளுக்கான காரணம் புரியாமல் இருந்ததையும் தாம் கண்டறிந்ததாக திரு இயோ தெரிவித்தார். இதனால் குழப்பமும் குளறுபடியும் அதிகரித்திருக்கக்கூடும் என்றார் அவர்.

இது குறித்து மனிதவள அமைச்சிடம் தம் குழு தெரிவித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டும் தொற்று அறிகுறிகள் இல்லாவிட்டால், தனிமைப்படுத்திக்கொள்வதற்காக தங்குவிடுதி வளாகத்தில் ஒதுக்கப்பட்ட ஓர் இடத்தில் 10 நாட்கள் வரை இருப்பது, இம்மாதத் தொடக்கம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கையாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!