'தொடக்கப்பள்ளி மாணவர்கள் சுயமாக 'கொவிட்-19' பரிசோதனை செய்ய வேண்டும்'

'தொடக்கப்பள்ளி மாணவர்கள் சுயமாக 'கொவிட்-19' பரிசோதனை செய்ய வேண்டும்'

2 mins read

தொடக்­கப்­பள்ளி மாண­வர்­கள் சுய­மாக 'ஆன்­டி­ஜன்' விரை­வுப் பரி­சோ­த­னையை இரு வாரங்­க­ளுக்கு ஒரு முறை செய்ய வேண்­டும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நவம்­பர் விடு­மு­றை­யில் பள்­ளி­கள் மூடப்­படும் வரை கொவிட்-19 சோத­னையைத் தொடர வேண்­டும் என்று அமைச்சு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இதன் தொடர்­பில் பெற்­றோ­ருக்­கும் காப்­பா­ளர்­க­ளுக்­கும் சுற்­று­அறிக்கை ஒன்றை நேற்று கல்வி அமைச்சு அனுப்­பி­வைத்­தது.

அதில், வரும் திங்­கட்­கி­ழ­மை­யிலிருந்து ஒவ்­வொரு மாண­வ­ருக்­கும் தலா 10 'ஏஆர்டி' சோத­னைக் கரு­வி­கள் வழங்­கப்­படும் என்று குறிப்­பிடப்பட்டிருந்தது.

அதா­வது, மாண­வர்­கள் அதி­க­மாக 'ஏஆர்டி' பரி­சோ­த­னைக் கருவி ­களை வாங்க வேண்­டியதில்லை.

கொவிட்-19 பரி­சோ­த­னையை சுய­மாக செய்­து­கொள்­வ­தால் மாண­வர்­க­ளி­டையே சமூ­கப் பொறுப்பை உணர்த்த முடி­யும் என்­றும் பள்­ளி­களைக் கற்­ற­லுக்­குப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க முடி­யும் என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

விடு­மு­றைக்கு முன்பு மாண வர்கள் இரண்டு முறை பரி­சோ­தனை செய்ய வேண்டியிருக்கும். அக்­டோ­பர் 31ஆம் தேதிக்­குள் முதல் சோத­னை­யை­யும் நவம்­பர் 14ஆம் தேதிக்­குள் இரண்­டா­வது சோத­னை­யை­யும் மாண­வர்­கள் செய்ய வேண்­டும்.

பெற்­றோ­ரும் காப்­பா­ள­ரும் மாண­வர்­கள் பரி­சோ­தனை செய்­யும்­போது உடன் இருந்து உதவி செய்­வது அவ­சி­யம் என்று கல்வி அமைச்சு கூறி­யது.

பரி­சோ­தனை முடி­வு­களை பள்ளி­ கள் வழங்­கிய தொடர்பு மூலம் பெற்­றோர் தெரி­விக்­க­லாம்.

தொற்று இருப்­பது உறு­தி­ யானால் உடனே வகுப்பு ஆசி­ரி­யர் மூலம் பள்­ளிக்­குத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும்.

தொற்று இருப்­பது உறுதியாகி உடல் நல­மில்­லா­மல் இருந்­தால் அவர்­கள் 'பிசி­ஆர்' சோத­னைக்கு ஆயத்­த­நி­லை­யில் உள்ள மருந்­த­கங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப் ­படு­வார்கள்.

அதே சம­யத்­தில் தொற்று உறுதி ­செய்யப்பட்டு உடல்­ந­லம் பாதிக்­கப்­ப­டா­மல் இருந்­தால் 'ஏஆர்டி' பரி­சோ­தனை செய்­யும்­வரை 72 மணி நேரத்­திற்குத் தனி­மைப்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டும். 'ஏஆர்டி' சோத­னை­யில் தொற்று இல்லை என்­பது தெரிந்தால் தனி­மையை முடித்­துக்கொள்­ள­லாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.