கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதால் அதனால் வர்த்தகங்களுக்கும் தனி நபர்களுக்கும் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க 640 மில்லியன் வெள்ளி நிதியாதரவு திட்டத்தை நேற்று அரசாங்கம் அறிவித்தது.
உணவு மற்றும் பானம், சில்லறை விற்பனைக் கடைகள், திரையரங்கு கள், அரும்பொருளகம், கலைக் கூடங்கள், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இடங்கள், குடும்பப் பொழுதுபோக்கு நிலையங்கள், பயணத் துறை, உடற் பயிற்சிக் கூடங்கள், கலை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனங்கள், கலைக் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை நீட்டிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வெகுவாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு நிதியாதரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 25 விழுக்காடு வரை சம்பள ஆதரவு வழங்கப்படும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கை யில் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடுமையாக்கப்படுவதால் பாதிப் படையும் குறிப்பிட்ட துறைகள் இதன் வழி நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும்.
தற்போதுள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது நவம்பர் 21ஆம் தேதி வரை அமலில் இருப்ப தால் வாடகைக் கட்டணச் சலுகை களையும் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, அரசாங்கத்துக்குச் சொந்தமான கட்டடங்களில் குடி யிருக்கும் தகுதிபெற்ற வாடகை தாரர்களுக்கு அரை மாதம் வாடகைக் கட்டணத்தில் கழிவு வழங்கப்படும். தனியார் கட்டடங் களில் உள்ள வாடகைதாரர்களுக்கும் இத்தகைய கழிவு வழங்கப்படுகிறது.
இது குறித்த மேல் விவரங்களை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் பின்னர் வெளியிடும்.
தேசிய சுற்றுப்புற வாரியம் நிர் வகிக்கும் உணவு நிலையங்களில் உள்ள சமைக்கப்பட்ட உணவுக் கடைகள், ஈரச்சந்தை கடைக் காரர்கள் அல்லது வாரியத்தால் நியமிக்கப்பட்ட நடத்துநர்களுக்கும் அரை மாதம் வாடகைக் கழிவு வழங்கப்படுகிறது.
கொவிட்-19 ஓட்டுநர் நிவாரண நிதி, டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
நவம்பர் வரை டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு நாள்தோறும் பத்து வெள்ளி வழங்கப்படும். டிசம்பரில் இந்தத் தொகை ஐந்து வெள்ளியாக இருக்கும்.
அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் நேற்று பேசிய நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதன் அவசியத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

