கொவிட்-19 கட்டுப்பாடுகள் நவம்பர் 21 வரை நீட்டிப்பு

கொவிட்-19 கட்டுப்பாடுகள் நவம்பர் 21 வரை நீட்டிப்பு

2 mins read

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

சிங்­கப்­பூ­ரில் தற்­போது நடப்­பில் உள்ள கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நவம்­பர் மாதம் 21ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

நாட்­டின் சுகா­தாரப் பரா­ம­ரிப்­புத் துறை­யின் சேவை­கள் தாக்­குப்­பி­டிக்­கும் அள­வைத் தாண்­டும் அபா­யம் இருப்­ப­தால் இந்த நீட்­டிப்பு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மொத்­தம் 1,650 தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட படுக்­கை­களில் 90 விழுக்­காட்­டிற்­கும் மேல் பயன்­பாட்­டில் உள்­ளது. மேலும் 200 தீவிர சிகிச்­சைப் பிரிவு படுக்­கை­களில் மூன்­றில் இரண்டு பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது.

"சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள் மற்றும் மருத்­து­வ­ம­னை­க­ளின் வேலைப் பளு கணிசமாக உள்­ளது," என்று மெய்­நி­கர் தளம் வழியே நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார்.

மனி­த­வ­ளத்தை அதி­க­ரிப்­பது உட்­பட பல வழி­களில் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ர­வும் வச­தி­யும் செய்­து­தர தமது அமைச்சு ஏற்­பா­டு­களைச் செய்­து­வ­ரு­வ­தா­கக் கூறிய அவர், ஆனால் அதற்கு கால அவ­கா­சம் தேவைப்­படும் என்­றார்.

நீட்­டிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் இரண்டு வாரத்­திற்­குப் பின்­னர் மறு­ப­ரி­சீ­லனை செய்­யப் படும். அப்­போது சமூக அள­வில் நோய்ப் பர­வல் சூழ­லின் நிலை­மை­யைக் கருத்­தில் கொண்டு கட்­டுப்­பா­டு­கள் மாற்­றப்­ப­ட­லாம்.

சமூக ஒன்றுகூடல்களுக்கு எண்ணிக்கைக் கட்டுப்பாடுகள், உணவகம், உணவங்காடிகளில் இருவர் மட்டுமே ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவது போன்ற கட்டுப்பாடுகள் தற்போது நடப்பில் உள்ளன.

"அடுத்த ஒரு மாதத்திற்கு அனைத்து கட்டுப்பாடுகளும் அப்படியே நிலையாக இருக்கவேண்டும் என்பதில்லை," என்று கொவிட்-19 கிருமித்தொற்றை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் மற்றொருவரான நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

ஞசில அம்சங்களில் அரசாங்கம் நடை முறைகளை மறு ஆய்வு செய்து அவற்றில் மாற்றங்களை முதலில் செயல்படுத்தும் என்றார் அவர்.

கட்டுப்பாடுகளின் நீட்டிப்பால் பாதிக்கப்படும் வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்க $640மில்லியன் ஆதரவு தொகுப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.

"இந்தக் காலக்கட்டம் வரையறை இல்லாமல் நீடிக்கப்போவதில்லை," என்று கூறிய அமைச்சர் வோங், இந்த கட்டுப்பாடுகளின் தேவையைப் புரிந்து அதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

"ஒரு கட்டத்தில், இந்தத் தொற்றின் அலை உச்சத்தை அடையும். அதிக மக்களுக்குத் தொற்று ஏற்பட்டுவருவதாலும் கூடுதல் தடுப்பூசியை வரும் வாரங்களில் இன்னும் அதிகமானோர் போடுவதாலும் கிருமிக்கு எதிரான எதிர்ப்புசக்தியும் மேலோங்கி இருக்கும்," என்றார் அவர்.