ஊழியர்க்காக 9 பரிந்துரைகள் ‘பிஎம்இ’ ஊழியர்க்கு ஆதரவு; எம்பிளாய்மண்ட் பாஸ் முறையை கடுமையாக்க கோரிக்கை

சிங்­கப்­பூ­ரில் வேலை இல்­லா­தோர் புதிய வேலை­க­ளைப் பெறு­வ­தற்கு ஏது­வாக நிதி உதவி உள்­ளிட்ட ஆத­ரவு ஏற்­பாடு தேவை என தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. அந்த ஏற்­பாட்­டில் உத­வி­யும் துணை வரு­வாய் நிவா­ர­ண­மும் கிடைக்க வேண்­டிய ஓர் அடிப்­படை அம்­சம் இருக்­க­வேண்­டும்.

அதோடு, தொழிற்­சங்க உறுப்­பி­னர்­கள், எளி­தில் பாதிக்­கப்­ப­டு­வோர், முதிர்ச்­சி­ய­டைந்த ஊழி­யர்­க­ளுக்கு மேலும் ஆத­ரவு கிடைக்­கும் வகை­யில் கூடு­தல் அம்­சம் ஒன்­றும் அந்த ஏற்­பாட்­டில் இடம்­பெற வேண்­டும் என்­றும் பரிந்­து­ரைக்­கப்­பட்டு உள்­ளது.

நிபு­ணர்­கள், நிர்­வா­கி­கள், மேலா­ளர்­கள் (பிஎம்இ) ஆகி­யோருக்கு உத­வு­வ­தற்கு உரிய மேலும் சிறந்த வழி­க­ளைக் காண ஓராண்டு­ கா­லம் கலந்­துரையாடல்­கள் இடம்­பெற்­றன.

தேசிய தொழிற்­சங்க காங்­கிரஸ், சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் கூட்­ட­மைப்பு ஆகிய இரண்டை­யும் சேர்ந்த ஒரு சிறப்­புப் பணிக்­குழு ஏறத்­தாழ 10,000 ஊழி­யர்­களை, நிறு­வ­னங்­க­ளின் தலை­வர்­களை உள்­ள­டக்கி அந்த கலந்­து­ரை­யா­டல் தொடரை நடத்­தி­யது. அதையடுத்து, தொழி­லா­ளர் இயக்­கம் ஒன்­பது பரிந்­து­ரை­களை நேற்று வெளி­யிட்­டது.

பரிந்­து­ரை­களை வெளி­யிட்டுப் பேசிய தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங், பிஎம்இ ஊழி­யர்கள், வெளி­நாட்­டி­னரிடமிருந்து கடு­மை­யான போட்­டியை எதிர்­நோக்­கு­கி­றார்­கள் என்று தெரி­வித்­தார்.

இத்­த­கைய மூத்த ஊழி­யர்­களைப் பொறுத்­த­வரை, வேலை­­இழந்­து­விட்­டால் மீண்டு வரு­வ­தும் பெரும் சவா­லாக இருக்­கிறது என்­றார் அவர்.

ஆகை­யால் உள்­ளூர் பிஎம்இ ஊழி­யர்­க­ளுக்கு உதவ மேலும் பல­வற்­றைச் செய்ய வேண்­டும்.

அதே­வே­ளை­யில், வேலை நிய­ம­னம், வேலை கிடைக்­கும் அள­வுக்குத் தகு­தி­யை உயர்த்தி கொள்­வது ஆகி­யவை போன்ற ஆத­ர­வும் அவர்­க­ளுக்குத் தேவை என்று அவர் குறிப்­பிட்­டார்.

வேலை இல்­லா­தோ­ருக்­கான உத்­தேச ஆத­ரவுத் திட்­டத்­தின் அளவு, நிபந்­த­னை­கள், சாத்­தி­யக்­கூ­று­கள் ஆகி­ய­வற்றை மதிப்­பிடு­வதற்­காக முத்­த­ரப்பு பணிக்­குழு ஒன்றை அமைக்க வேண்­டும் என்­றும் சிறப்­புப் பணிக்­குழு அழைப்பு விடுத்­துள்­ளது.

வேலை இல்­லா­தோ­ருக்­கான ஆத­ரவை எப்­போது, எந்த அள­வுக்கு, எவ்­வ­ளவு காலத்­திற்கு வழங்­கு­வது என்­பவை போன்ற மேலும் பல அம்­சங்­களை ஆராய வேண்­டும் என்று தொழிற்சங்க உதவித் தலை­மைச் செய­லா­ளர் பேட்­ரிக் டே கருத்­து­ரைத்­தார்.

இத்­த­கைய ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்­தும் நிறு­வனங்­ க­ளுக்கு 50 விழுக்­காடு அள­வுக்கு ஆறு மாத காலத்­திற்குச் சம்­பள ஆத­ரவை அர­சாங்­கம் தர வேண்டும் என்­றும் பணிக்­குழு பரிந்­து­ரைத்து உள்­ளது.

மேலும், எம்­பி­ளாய்­மண்ட் பாஸ்­தா­ரர்­க­ளுக்­கான விண்­ணப்ப நடை­மு­றையை மறு­ப­ரி­சீ­லனை செய்­வ­தன் மூலம் சிங்­கப்­பூ­ரர்­களை மூலா­தா­ர­மா­கக் கொண்ட ஊழி­யர் அணியைப் பலப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி அதற்­கான பரிந்­துரை­களை­ குழு முன்­னு­ரைத்தது.

வேலை­யைப் பொறுத்து வெளி­நாட்­டி­ன­ருக்­கான அனு­மதி வேறு­பட்டு இருக்­க­வேண்­டும்; வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் இருந்து உள்­நாட்டு பிஎம்இ ஊழி­யர்­களுக்குத் தேர்ச்­சி­கள் கிடைப்­பதற்­கான வழி­வ­கை­க­ளை­யும் நிறு­வ­னங்­கள் ஏற்­ப­டுத்­தித் தர­வேண்­டும். மனி­த­வளத் தரங்­களை மேம்­ப­டுத்த வேண்­டும் என்­றும் பணிக்­குழு பரிந்­து­ரைத்­துள்­ளது.

1. நியாயமான வேலை நியமன நடைமுறை மேம்பட வேண்டும்; 2. சிங்கப்பூரர்களை ஆதாரமாகக்கொண்ட மூலாதார ஊழியரணி பலமடைய வேண்டும்; 3. பிஎம்இ ஊழியர்களுக்கு ஆதரவு பரவலாக வேண்டும்; 4. வேலையில்லா பிஎம்இ ஊழியர்களுக்கு வருவாய் ஆதரவு வலுப்பெற வேண்டும்; 5. முதிர்ச்சியடைந்த பிஎம்இ ஊழியர்கள் ஏற்புடைய வேலையைப் பெற உதவவேண்டும்;

6. சிங்கப்பூரர்களான பிஎம்இ ஊழியர்களுக்குத் தலைமைத்துவ மேம்பாட்டுச் செயல்திட்டங்கள் பலமடைய வேண்டும்; 7. பிஎம்இ ஊழியர்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத்தொழில் பயிற்சிப்படிப்பு ஆதரவு தேவை; 8. பிஎம்இ ஊழியர்களுக்கு நன்கு வடிவமைக்கப்பட்ட வேலை தேர்ச்சித் திட்டங்கள் உருவாக வேண்டும்; 9. பொருளியல் உருமாற்றம், முதலீட்டுத் திட்டங்களுக்கு ஏற்ப ஊழியர் அணியைத் தயார்ப்படுத்த முத்தரப்பு பங்காளிகளுக்கு இடையிலான பிணைப்பைப் பலப்படுத்த வேண்டும்.

பணிக்குழுவின் பரிந்துரைகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!