மழை: இந்தியா, நேப்பாளத்தில் 200 பேர் மரணம்

பரு­வ­நிலை மாற்­றம், காட்டுவளம் இழப்பு, அள­வுக்கு அதிக கட்­டு­மானங்­கள் கார­ண­மாக தெற்­கா­சிய நாடு­களில் பரு­வ­நிலை பாதிப்­பு­கள் அதி­க­மாகி வரு­கின்­றன.

இந்­தி­யா­வி­லும் நேப்­பா­ளத்­தி­லும் கடும் மழை கார­ண­மாக ஏறத்­தாழ 200 பேர் மாண்­டு­விட்­ட­னர் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மேலும், கடுமை­யான மழை தொட­ரும் என்ற முன்­னு­ரைப்­பு­கள் அச்­ச­மூட்டி இருக்­கின்­றன. நேப்­பா­ளத்­தில் 88 பேர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் மூன்று பிள்­ளை­கள் உள்­ளிட்ட ஆறு பேரைக் கொண்ட ஒரு குடும்­பம் அப்­ப­டியே நிலச்­ச­ரி­வில் புதை­யுண்டு போன­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இந்­தி­யா­வின் உத்­தர­காண்­டில் 55 பேர் மாண்­டு­விட்­ட­தா­க­வும்­ சுற்­றுப் பய­ணி­கள் 20 பேர் உள்­ளிட்ட பலரை­யும் காண­வில்லை என்­றும் மரண எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­றும் அந்த மாநி­லத்­தின் பேரி­டர் மீட்புத் துறை செய­லா­ளர் எஸ் முரு­கே­சன் தெரி­வித்­தார்.

மேற்கு வங்­கா­ளத்­தில் ஐவர் கொல்­லப்­பட்­ட­னர். டார்­ஜி­லிங்­கில் ஏறத்­தாழ 400 வீடு­கள் இடிந்­து­விட்­டன. ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­னர். நூற்­றுக்­க­ணக்­கான சுற்­றுப்பயணி­கள் மாட்­டிக்­கொண்டுள்ளனர். கேர­ளா­வில் 42 பேர் மாண்­டு­விட்­ட­னர் என்று அதிகாரிகள் கூறியதாக தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!