மருத்துவமனை செல்ல நவம்பர் 21 வரை தடை

மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் முதியோர் தங்கி சிகிச்சை பெறும் பரா­ம­ரிப்பு இல்­லங்­க­ளுக்­கும் மக்­கள் நவம்­பர் 21ஆம் தேதி வரை நேர­டி­யா­கச் சென்றுவர இய­லாது என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறைக்கு ஏற்­படும் சுமை­யைக் குறைக்­க­வும் முதி­ய­வர்­களை கொவிட்-19 தொற்­றில் இருந்து காக்­க­வும் இந்த நடவடிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக அமைச்சு விளக்­கி­யது.

மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு மக்­கள் நேர­டி­யா­கச் செல்­வ­தற்கு விதிக்­கப்­பட்ட தடை அக்­டோ­பர் 23ஆம் தேதி­யு­டன் முடி­வ­டைய இருந்­தது.

பரா­ம­ரிப்பு இல்­லங்­க­ளுக்கு வரும் ஞாயிறுவரை நேரடி வருகைக்குத் தடை விதிக்­கப்­பட்டு இருந்­தது. இந்­தத் தடை இப்­போது நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நவம்­பர் 21ஆம் தேதிவரை ஒரு மாத காலத்­திற்கு நீட்­டிக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­ட­தற்கு ஒரு நாள் கழித்து இந்த அறி­விப்பு இடம்­பெ­று­கிறது.

கடந்த இரண்டு வார கால­மா­கவே சமூ­கத்­தில் கொரோனா தொற்று கூடி­ய­தன் விளை­வாக மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்­சைக்­காக சேர்க்­கப்­பட்டு உள்­ளோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து உள்­ளது என்று அமைச்சு தெரி­வித்­தது.

மருத்­து­வ­ம­னை­கள், முதி­யோர் பரா­ம­ரிப்பு இல்­லங்­களில் உள்­ள­வர்­க­ளி­டையே புதிய கொவிட்-19 தொற்­றுக் குழு­மங்­களும் தலை­காட்டி இருக்­கின்­றன.

பெரி­ய­ள­வில் தொற்று ஏற்­ப­டு­வ­தைத் தடுக்­கும் வகை­யில் பூஸ்­டர் தடுப்­பூசி இயக்­கம் முடுக்­கி­வி­டப்­பட்டு உள்­ளது என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

மோச­மான நிலை­யில் சிகிச்சை பெற்று வரு­வோ­ரைக் காண ஐந்து பேர்­வரை அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள். ஒரு நேரத்­தில் இரு­வ­ருக்கு அனு­மதி இருக்­கும்.

அனு­ம­திக்­கப்­படும் அனை­வ­ருக்­கும் தொற்று இல்லை என்­பது 24 மணி நேரம் முன்­ன­தாக எடுக்­கப்­பட்ட பரி­சோ­தனை மூலம் தெரி­ய­வர வேண்­டும்.

அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணி­வது உள்­ளிட்ட பல கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்ற வேண்­டும்.

நேர­டி­யாக மருத்­து­வ­ம­னை­களுக்­கும் பரா­ம­ரிப்பு இல்­லங்­க­ளுக்கும் செல்ல முடி­ய­வில்லை என்­றா­லும் தொலை­பேசி அல்­லது காணொளி வழி உரி­ய­வ­ரு­டன் பேச­வும் அவர் பற்றி தக­வல் அறி­ய­வும் சேவை வழங்கப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!