3,000 வெளிநாட்டு ஊழியர்கள் லிட்டில் இந்தியா செல்கின்றனர்

3,000 வெளிநாட்டு ஊழியர்கள் லிட்டில் இந்தியா செல்கின்றனர்

2 mins read

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஏறக்குறைய 3,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள், லிட்­டில் இந்­தியா மற்­றும் கேலாங் சிராய் வட்­டா­ரங்­க­ளுக்­குச் செல்ல அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் 30ஆம் தேதி­யி­லி­ருந்து ஒவ்­வொரு முறை­யும் சுமார் எட்டு மணி நேரம் வரை இரு வட்­டாரங்­களுக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் செல்லலாம்.

தடுப்­பூசி போட்­டுள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மீதான கட்டுப்­பாடுகளைத் தளர்த்­தும் முயற்­சி­யின் ஒரு பகு­தி­யாக இந்த நட­வ­டிக்கை இடம்­பெ­று­கிறது என்று நேற்று வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில் மனி­த­வள அைமச்சு தெரி­வித்­தது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் சமூக வருகை திட்­டத்தை மேலும் விரி­வு­ப­டுத்­து­வ­தா­க­வும் பொழு­து­போக்கு நிலை­யங்­க­ளுக்­குச் செல்­வ­தற்­கான கட்­டுப்­பாடு­ களைப் படிப்­ப­டி­யாக தளர்த்­து ­வ­தா­க­வும் அமைச்சு மேலும் சொன்னது.

இதன்­படி லிட்­டில் இந்­தியா, கேலாங் சிராய் வட்­டா­ரங்­ களுக்குச் செல்­வது மட்­டு­மல்­லா­மல் தடுப்­பூசி போட்ட அனைத்து வெளி­நாட்டு ஊழி­யர்­களும் வாரத்­திற்கு மூன்று முறை பொழு­து­போக்கு நிலை­யங்­க­ளுக்­குச் ெசல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர். இதற்கு முன்­கூட்­டியே 'ஏஆர்டி' சோத­னை செய்ய வேண்­டியதில்லை.

தடுப்­பூசி போடாத வெளி­நாட்டு ஊழி­யர்­களும் வாரத்­திற்கு மூன்று முறை பொழு­து­போக்கு நிலை­யங்­க­ளுக்­குச் செல்ல அனு­மதி வழங்­கப்படு­கிறது.

ஆனால் வழக்­க­மான 'ஏஆர்டி' சோத­னை­யில் தொற்று இல்லை என்­பதை அவர்­கள் உறு­திப்­ படுத்த வேண்­டும் அல்­லது அங்கு செல்­வ­தற்கு முன்பு 'ஏஆர்டி' சோத­னை­யின் எதிர்­மறை முடிவை காட்ட வேண்­டும்.

கடந்த மாதம் சோதனை முறையில் 700 தடுப்பூசி போட்ட ஊழியர்கள், ஒவ்வொரு முறையும் ஆறு மணி நேரம் வரை லிட்டில் இந்தியா சென்றுவர அனுமதிக்கப் பட்டனர். அங்கு செல்வதற்கு முன்பும் பின்பும் அவர்கள் 'ஏஆர்டி' சோதனை செய்து கொண்டனர்.

இம்முயற்சியின் தொடர்ச்சி யாக தற்போது மேலும் பல நூறு ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகளை மனிதவள அமைச்சு தளர்த்தி யிருக்கிறது.