வீட்டுக்கு வீடு ‘ஏஆர்டி’ சோதனை கருவி விநியோகம்

நாடு முழு­வ­தும் வீட்­டுக்கு வீடு 'ஏஆர்டி' ஆன்­டி­ஜன் விரைவு பரி­சோ­தனை கரு­வி­களை விநி­யோ­கிக்­கும் பணி நேற்­றுக் காலை தொடங்­கி­யது.

சிங்­போஸ்ட் ஊழி­யர்­களில் ஒரு­வ­ரான ஷர்லி சீ பீ லெங், கம்­பாஸ்­வேல் கிர­செண்­டில் உள்ள வீவக வீடு ­களுக்கு தள்­ளு­வண்­டி­யில் 140க்கும் மேற்­பட்ட பொட்­ட­லங்­களை எடுத்­துச் சென்­றார். ஒவ்­வொன்­றி­லும் பத்து 'ஏஆர்டி' கரு­வி­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன.

ஷர்­லி­யைப் போன்று ஆயிரம் சிங்­போஸ்ட் ஊழி­யர்­கள் நேற்று தீவு முழு­வ­தும் சென்று வீவக குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் கடிதப் பெட்­டி­யில் 'ஏஆர்டி' கரு­வி­களைச் சேர்த்­த­னர்.

இது, இரண்­டா­வது முறையாக நடை­பெ­றும் மாபெ­ரும் விநி­யோ­கிப்பு இயக்­க­மா­கும்.

சிங்­கப்­பூ­ரில் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் நாள்­தோ­றும் ஆயி­ரத்­தைத் தாண்டி வரும் வேளை­யில் டிசம்­பர் 7ஆம் தேதி வரை இந்த விநி­யோ­கம் தொட­ரும் என்று அறி­விக்­கப் பட்­டுள்­ளது.

சுகா­தார அமைச்சு இந்­தக் கரு­வி­களை 1.54 மில்லியன் குடும்­பங்­க­ளுக்கு சிங்­போஸ்ட் வழி­யாக விநி­யோ­கித்து வரு­கிறது.

கொவிட்-19 தொற்­று­நோ­யோடு வாழ்ந்து தாக்­குப்­பி­டிக்­கும் நாடாக சிங்­கப்­பூர் மாறி வரு­வ­தால் அந்த நோயை நிர்­வ­கிப்­ப­தில் சிங்­கப்­பூ­ரர்­ க­ளின் பங்­கும் அதி­க­ரித்து வரு­கிறது என்று ஆகஸ்ட்­டில் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!