கொவிட்-19 தொற்றால் மேலும் 14 பேர் உயிரிழப்பு; புதிதாக 3,637 பேருக்குத் தொற்று

கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மேலும் 14 சிங்கப்பூரர்கள் உயிரிழந்துவிட்டனர்.

அவர்களில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 41 வயது நபர் ஒருவரும் அடங்குவார். நோயெதிர்ப்பாற்றல் குறைவாக இருந்த அவருக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பும் இருந்தது.

உயிரிழந்தவர்களில் எழுவர் ஆடவர்கள், எழுவர் மாதர்கள் என்று சுகாதார அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) இரவு தெரிவித்தது.

அந்த 41 வயது நபர் போக, உயிரிழந்த மற்றவர்கள் 59 முதல் 97 வயதிற்குட்பட்டவர்கள். ஐவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், எழுவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, ஒருவர் ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

உயிரிழந்தவர்களுக்குப் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன.

கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை, தொடர்ந்து 33வது நாளாக கொவிட்-19 மரணங்கள் பதிவாகின.

இதற்கிடையே, சிங்கப்பூரில் புதிதாக 3,637 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. சமூகத்தில் 3,039 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 592 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் அறுவருக்கும் தொற்று உறுதியானது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!