கிருமிப் பரவல் சீரடைந்தால் தீபாவளிக்குள் தளர்வுகள்

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

சிங்­கப்­பூ­ரில் பதி­வா­கும் புதிய கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் அன்­றாட அதி­கரிப்பு விகி­தம், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு கடும் உடல்­ந­லக்­கு­றை­வுக்கு ஆளா­வோ­ரின் விகி­தம், மருத்­து­வ­ம­னை­களில் குறிப்­பாக தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் படுக்­கை­கள் நிரப்­பப்­படும் விகி­தம் ஆகிய மூன்று அம்­சங்­களை ஆராய்ந்த பின், அடுத்த கட்­டத் தளர்­வு­கள் அறி­விக்­கப்­படும்.

நிதி­ய­மைச்­ச­ரும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த அமைக்­கப்­பட்­டுள்ள அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு லாரன்ஸ் வோங் நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் இத­னைக் குறிப்­பிட்­டார்.

தீபா­வ­ளிக்கு இன்­னும் சில நாட்­களே உள்ள நிலை­யில், நேற்று அறி­விக்­கப்­பட்ட கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­களில் வீடு­க­ளுக்­குச் செல்­வது தொடர்­பில் தக­வல் ஏதும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

தீபா­வ­ளி­யைக் கருத்­தில்­கொண்டு அந்த தளர்­வு­க­ளைச் செயல்­ப­டுத்­தும் சாத்­தி­யம் உள்­ளதா என்று தமிழ் முரசு செய்­தி­யா­ளர் எழுப்­பிய கேள்­விக்கு அமைச்­சர் வோங் இவ்­வாறு பதி­ல­ளித்­தார்.

கடந்த ஆண்­டி­லும் இந்த ஆண்­டி­லும் நோய்ப் பர­வல் சூழ­லில் மக்­கள் பண்­டிகை­களைக் கொண்­டா­டி­யுள்­ளதை நினை­வு­படுத்­தி­னார் அமைச்­சர்.

தொடர்ந்து கிரு­மிப் பர­வல் சூழ்­நி­லை­யைக் கருத்­தில் கொண்டு கட்­டுப்­பா­டு­கள் மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும் என்று நம்­பிக்­கை­ய­ளித்­தார்.

அடுத்த கட்ட தளர்­வு­களை அறி­விப்­ப­தற்கு என்­னென்ன அம்­சங்­களை அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­குழு ஆரா­யும் என்­பதைத் தொடர்ந்து விளக்­கி­னார் அமைச்­சர் வோங்.

ஒரு வாரத்­தில் பதி­வா­கும் தொற்று எண்­ணிக்கை, அதற்கு முந்­திய வாரத்­தின் தொற்று எண்­ணிக்­கை­யை­விட ஒரு விகி­தம் குறை­வாக இருக்­கு­மா­யின் தளர்­வு­கள் அறி­விக்­கப்­படும்.

தற்­போது அந்த விகி­தம் 1க்கும் சற்று அதி­க­மாக உள்­ளது என்­றும் முன்­னர் அந்த எண்­ணிக்கை 1.5ஆக இருந்­தது என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

அதைப்­போல தீவிர சிகிச்­சைப் பிரிவு­ படுக்­கை­க­ளின் பயன்­பாட்டு எண்­ணிக்­கை­யை­யும் கருத்­தில்­கொள்­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

நோய்ப் பர­வல் சூழல் கட்­டுக்­குள் வந்­தால் மூன்று அம்­சங்­களில் முத­லில் தளர்­வு­கள் அறி­விக்­கப்­படும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

குழு விளை­யாட்­டு­களை அனு­ம­திப்­பது, பள்­ளி­க­ளி­லும் உயர்­கல்வி நிலை­யங்­க­ளி­லும் கூடு­தல் நட­வ­டிக்­கை­க­ளைத் தொடங்­கு­வது, ஒரே வீட்­டைச் சேர்ந்த ஐவர் ஒன்­றாக வெளி­யில் சென்று உண­வ­ருந்­து­வது ஆகி­ய­வற்றை அமைச்­சர் வோங் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!