இந்தியா சென்றுவரும் பயணிகளுக்கு அனுமதி

இந்தியா சென்றுவரும் பயணிகளுக்கு அனுமதி

1 mins read

கொவிட்-19க்கு எதி­ரான கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­யாக சிங்­கப்­பூர் வரு­வ­தற்­குக் குறிப்­பிட்ட சில நாட்­டுப் பய­ணி­க­ளுக்­குத் தடை­வி­திக்­கப்­பட்­டது. இருப்­பி­னும், அனைத்­து­லக கொவிட்-19 சூழ­லுக்கு ஏற்ப, எல்­லை­கள் தொடர்­பான நட­வ­டிக்கை­களில் மாற்­றம் செய்­து­வ­ரும் சிங்­கப்­பூர், இனி ஆறு தெற்­கா­சிய நாடு­க­ளைச் சேர்ந்த பய­ணி­க­ளைப் புதன்­கி­ழமை முதல் அனு­ம­திக்­கும்.

இந்­தியா, இலங்கை, நேப்­பா­ளம், மியன்­மார், பங்­ளா­தேஷ், பாகிஸ்­தான் ஆகிய நாடு­க­ளுக்­குக் கடந்த 14 நாட்­கள் சென்­றுள்ள பய­ணி­கள், சிங்­கப்­பூ­ருக்கு வர­வும் சிங்­கப்­பூர் வழி­யாக வேறு நாட்­டுக்­குச் செல்­ல­வும் அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்று நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. இருப்­பி­னும், குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­களுக்கு இந்­தத் தளர்வு பொருந்­தாது. இந்த ஆறு நாடு­க­ளைச் சேர்ந்த பய­ணி­கள், சிங்­கப்­பூர் வந்­த­தும் குறிப்­பிட்ட ஒரு வளா­கத்­தில் 10 நாட்­க­ளுக்­குத் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டும்.

மலே­சியா, இந்­தோ­னீ­சியா உட்­பட வேறு பல நாடு­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­க­ளை­யும் புதன்­கி­ழமை முதல் தளர்த்த உள்­ள­தாக அமைச்சு குறிப்­பிட்­டது. இவ்­விரு நாடு­க­ளைச் சேர்ந்­தோர், தாங்­களே ஓர் இடத்­தைத் தேர்­வு­செய்து அங்கு தங்­க­ளின் 10 நாள் தனிமை உத்­தரவை நிறை­வேற்­ற­லாம்.