முகத்தில் கவசம், மனதில் பக்திப் பரவசம்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஒழி­ய­வில்லை என்­றா­லும் நேரடியாக தீமிதி விழா­வில் கலந்­து­கொள்­ளும் வாய்ப்பு மக்­க­ளுக்கு இந்த ஆண்டு கிடைத்­தது.

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரி­யம்­மன் ஆல­யத்­தில் பலத்த கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்றி முகக்­க­வ­சம் அணிந்து நேற்று தீமி­தித்த 950 பக்­தர்­களில் ஏறத்­தாழ 85 விழுக்­காட்­டி­னர் சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­க­ளு­மாக இருந்­த­னர்.

வழக்­க­மாக தீமி­தி­யில் கலந்­து­கொள்­வோ­ரில் 40 விழுக்­காட்­டி­னர் சிங்­கப்­பூ­ரர்­களாக இருப்­பார்­கள் என்று சவுத் பிரிட்ஜ் ரோடு கோயில் நிர்­வா­கத் தலை­வர் சீ லெச்­சு­ம­ணன் கூறி­னார்.

இந்து அறக்­கட்­டளை வாரி­யம் அனைத்­தை­யும் கச்­சி­த­மாக ஏற்­பாடு செய்து இருந்­தது என்று பக்­தர்­களும் தீமி­தித் திரு­விழா­வில் பொது­மக்­களும் பங்­கேற்க முடிந்­த­தில் எங்­க­ளுக்கு மகிழ்ச்சி என்று இந்து அறக்­கட்­டளை வாரி­ய­மும் தெரி­வித்­தன.

விரிவான செய்திகள் பக்­கம் 4ல்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!