பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு: சிங்கப்பூருடன் மலேசியா பேச்சு

பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு: சிங்கப்பூருடன் மலேசியா பேச்சு

1 mins read

மலேசியாவும் சிங்கப்பூரும் அணுக்க நாடுகள் என்ற முறையில், பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி ஆராய்ந்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.

ஜப்பானில் நடந்த உலக சுகாதார நிறுவனத்தின் வட்டார கூட்டத்தில் கலந்துகொள்ள சாங்கி விமான நிலையம் வழியாக சென்றபோது சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கை தான் சந்தித்ததாக திரு கைரி தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.

மேலும் வசதியான பயண ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்வதன் தொடர்பில் இரு தரப்புகளும் செயல்பட்டு வருவதாகவும் விரைவில் அறிவிப்பு இடம்பெறும் என்று தாங்கள் நம்புவதாகவும் திரு கைரி கூறினார்.

தொற்று நிலவரங்களைப் பொறுத்து உலக நாடுகளையும் வட்டாரங்களையும் சிங்கப்பூர் நான்கு பிரிவுகளாகப் பிரித்து உள்ளது. தொற்று அதிகம் உள்ள நாடுகளும் வட்டாரங்களும் நான்காவது பிரிவில் உள்ளன.

மலேசியாவை, நான்காவது பிரிவில் இருந்து மூன்றாவது பிரிவுக்கு சிங்கப்பூர் மாற்றி உள்ளது.

மூன்றாம் பிரிவு நாடுகளில் இருந்து வரும் பயணிகள், வரும் புதன்கிழமை முதல் 10 நாள் தனிமை உத்தரவை தங்கள் வசிப்பிடத்தில் நிறைவேற்றலாம்.