‘விடிஎல்’ திட்டத்தில் ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து

ஆஸ்­தி­ரே­லியா, சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து நவம்­பர் 8ஆம் தேதி முதல் சிங்­கப்­பூர் வரும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள், இங்கு வந்­தி­றங்­கி­ய­தும் தனிமைப்­படுத்­திக்­கொள்­ளத் தேவை­யில்லை.

சிங்­கப்­பூ­ரின் தடுப்­பூ­சிப் பய­ணத்­தட (விடி­எல்) திட்­டம் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­கும் சுவிட்­சர்­லாந்­துக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு உள்ள நிலை­யில் இது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது. அதன்­படி, அடுத்த மாதத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­கும் இடையே தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யின்றி ஆஸ்­தி­ரே­லி­ய­வா­சி­கள் பய­ணம் மேற்­கொள்­ள­லாம்.

மாண­வர் மற்­றும் வர்த்­தக அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போர், சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குச் செல்­வ­தற்­கான இதே­போன்ற பயண ஏற்­பாடு நவம்­பர் 23ஆம் தேதிக்­குள் நடப்­புக்கு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்கு சுவிட்­சர்­லாந்து தனது எல்­லை­களை ஏற்­கெனவே திறந்­து­விட்­டுள்­ளது.இப்­போது தடுப்­பூ­சிப் பய­ணத்­த­டத் திட்­டத்­தில் சுவிட்­சர்­லாந்து சேர்க்­கப்­பட்­டுள்­ள­தன்­மூ­லம், சிங்­கப்­பூர்­வா­சி­கள் தனி­மைப்­படுத்­திக்­கொள்­ளத் தேவை­யின்றி சுவிட்­சர்­லாந்து சென்று திரும்­ப­லாம்.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வரும் சுற்­றுப்­ப­ய­ணி­கள் உட்­பட தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட இதர பய­ணி­க­ளுக்­கான பயண ஏற்­பாடு, ஆண்­டி­றுதிக்­குள் நடப்­புக்கு வர­லாம் என ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கூறி­இருந்­தார். ஆஸ்­தி­ரே­லியா, சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடு­கள் உட­னான தடுப்­பூ­சிப் பய­ணத்­த­டத் திட்­டம் குறித்து போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் அறி­வித்­தார்.

தனது எல்­லை­க­ளைத் திறந்­து­வி­டு­வ­தில் சிங்­கப்­பூர் முனைப்­பு­டன் செயல்­ப­டு­வது முக்­கி­யம் என்று அவர் கூறி­னார். விமா­னத்­துறை நடு­வ­மாக சிங்­கப்­பூர் அதன் தகு­தியை மீண்­டும் வளர்த்­துக்­கொள்­வ­தும் அவ­சி­யம் என்­றார். சிங்­கப்­பூ­ரு­டன் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­கும் சுவிட்­சர்­லாந்­துக்­கும் வலு­வான பொரு­ளி­யல் உறவு இருப்­பதை அவர் சுட்­டி­னார். இரு நாடு­களில் கொவிட்-19 தொற்­றுப் பாதிப்பு குறை­வாக இருப்­ப­தை­யும் அவர் குறிப்­பிட்­டார். அண்டைநாடு­கள் உட்­பட மேலும் அதி­க­ நாடு­க­ளுக்­குத் தடுப்­பூ­சிப் பய­ணத்­தடத் திட்­டத்தை விரி­வு­ப­டுத்­து­வது தொடர்­பில் சிங்­கப்­பூர் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக திரு ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

தற்­போது 'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் ஒரு நாளில் 3,000 பய­ணி­கள் வரை பய­ணம் மேற்­கொள்­ள­லாம். புதி­தாக ஆஸ்­தி­ரே­லியா, சுவிட்­சர்­லாந்து இத்­திட்­டத்­தில் சேர்த்­த­தன் மூலம் இந்த எண்­ணிக்கை 4,000க்கு உயர்த்­தப்­படும் என்று திரு ஈஸ்­வ­ரன் அறி­வித்­தார்.

'விடி­எல்' திட்­டம் மூலம் சிங்­கப்­பூ­ருக்­குள் வரு­வோர், கொவிட்-19 கிரு­மிப் பரி­சோ­த­னையை மட்­டுமே மேற்­கொள்ள வேண்­டி­ இ­ருக்­கும். சிங்­கப்­பூர் இது­வரை 11 'விடி­எல்' திட்­டங்­களை அறி­வித்­துள்­ளது. அமெ­ரிக்கா, பிரிட்­டன் உட­னான 'விடி­எல்' திட்­டங்­கள் தொடங்­கி­விட்­டன. தென்­கொ­ரி­யா­வு­ட­னான 'விடி­எல்' திட்­டம் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்­க­வுள்­ளது.

தடுப்­பூ­சிப் பய­ணத்­த­டத் திட்­டம் இது­வரை வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது. இத­னால், கூடு­த­லான நாடு­களுக்கு அதை விரி­வு­ப­டுத்த தனக்கு நம்­பிக்கை கிடைத்­துள்­ள­தாக சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் கூறி­யது. 2019ல் சிங்­கப்­பூ­ருக்கு வந்த மொத்த பய­ணி­கள் எண்­ணிக்­கை­யில், ஆஸ்­தி­ரேலி­யா­வி­லி­ருந்து வந்­தோர் 4 விழுக்­காட்­டி­னர் என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 50,000க்கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் வசிக்­கின்­ற­னர். சிங்­கப்­பூ­ரில் 25,000க்கும் அதி­க­மான ஆஸ்­திரே­லி­யர்­கள் உள்­ள­னர். சிங்­கப்­பூ­ரில் 3,000க்கும் மேற்­பட்ட சுவிஸ் நாட்­ட­வர்­கள் வசிக்­கின்­ற­னர். பிர­தான நிதி மைய­மாக விளங்­கும் சுவிட்­சர்­லாந்து, சிங்­கப்­பூ­ரின் முன்­னணி வர்த்­தக, முத­லீட்டு பங்­கா­ளி­களில் ஒன்­றாக விளங்­கு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!