பிரதமர் லீ: மியன்மார் ஒத்துழைக்க வேண்டும்

மியன்­மார் ராணுவ அதி­கா­ரி­க­ளின் முழு­மை­யான ஒத்­து­ழைப்பு விரை­வில் தேவைப்­ப­டு­வ­தாக பிர­த­மர் லீ சியன் லூங் அறி­வு­றுத்­தி­யுள்­ளார். தற்­போது மியன்­மா­ரில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­யைத் தணிக்­கும் ஆசி­யா­னின் முயற்­சி­களில் ஒன்­றாக, சிறப்­புத் தூதர் ஒரு­வ­ரும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

இதற்­கு­முன்பு தொடங்­கப்­பட்ட அமை­திப் பேச்­சு­வார்த்­தைத் திட்­டத்­தில் 'முன்­னேற்­றம் அவ்­வ­ள­வாக இல்லை' என்று குறிப்­பிட்ட திரு லீ, இத­னால் மியன்­மார் மக்­க­ளுக்­கும் விதி­மு­றை­கள் சார்ந்த அமைப்­பா­கக் கரு­தப்­படும் ஆசி­யா­னின் நம்­ப­கத்­தன்­மைக்­கும் உண்­மை­யான விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கக் கூறி­னார். வட்­டார நாடு­க­ளின் தலை­வர்­க­ளு­டன் நடை­பெற்ற ஆசி­யான் இணைய மாநாட்­டின்­போது திரு லீ இவ்­வாறு பேசி­யி­ருந்­தார்.

மியன்­மா­ரில் ஏற்­பட்டு வரும் பதற்­ற­நி­லையை ஒரு முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரவோ பேச்­சு­வார்த்தை தொடங்­கவோ தவ­றி­விட்ட கார­ணத்­தால், ராணு­வத் தலை­வர் மின் அவுங் லைங்கை ஓரங்­கட்­டும் அரிய முடி­வுக்கு வந்­த­து, பத்து உறுப்­பு­நா­டு­க­ளைக் கொண்ட ஆசி­யான்.

அத­னால், மாநாட்­டின்­போது மியன்­மார் தலை­வ­ருக்­கு­ரிய வெற்று இருக்கை மட்­டுமே காணப்­பட்­டது.

பிப்­ர­வ­ரி­யில் நடந்த ஆட்­சிக் கவிழ்ப்­புக்­குப்­பின், மியன்­மா­ரில் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் கொல்­லப்­பட்­டும் கைது­செய்­யப்­பட்­டும் உள்­ள­னர்.

"ஆக்­க­பூர்­வ­மான, அமை­தி­யான, நேர்­ம­றை­யான வகை­யில் மியன்­மா­ருக்கு உத­வும் ஆசி­யா­னின் முயற்­சி­க­ளுக்கு சிங்­கப்­பூர் அதன் வலு­வான ஆத­ரவை அளிக்­கிறது," என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!