தமிழ்மொழி பயன்பாடு தொடர்பில் மலேசிய நாடாளுமன்றத்தில் மோதல்

தமிழ்மொழி பயன்பாடு தொடர்பில் மலேசிய நாடாளுமன்றத்தில் மோதல்

1 mins read

யானை­யைக் கட்­டுப்­ப­டுத்த தமிழ்­மொ­ழி­யைப் பயன்­ப­டுத்­தி­ய­தாக மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் தேசிய முன்­னணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அப்­துல் அஸீஸ் அப்­துல் ரஹிம் கூறி­ய­தற்கு எதிர்ப்பு கிளம்­பி­யது. அவ்­வாறு கூறி­யதை அப்­துல் அஸீஸ் மீட்­டுக்­கொள்ள வேண்­டும் என்­றும் மீண்­டும் ஒரு­முறை அது­போல பேசக்­கூ­டாது என்­றும் எதிர்த்­த­ரப்பு ஜன­நா­ய­கச் செயல் கட்சி உறுப்­பி­னர் ஆர்­என்­ஆர் ராயர் கூறி­னார்.

"யானை­க­ளி­டம் தமி­ழில் பேசி­ய­தாக அப்­துல் அஸீஸ் கூறு­வது முட்டாள்தனமானது," என்­றார் அவர். காய­ம­டைந்த காட்டு யானை ஒன்று கரும்­புத் தோட்­டத்தை அழித்­த­போது தாம் அத­னி­டம் தமி­ழில் பேசி உணவு அளித்­த­தாக அப்­துல் அஸீஸ் கூறி­யி­ருந்­தார்.

முன்­னோர்­கள் யானை­க­ளி­டம் தமிழ், தாய்­லாந்து மொழி மற்­றும் மியன்­மார் மொழி­களில் பேசி­ய­தால் தாம் தமிழ்­மொ­ழி­யைப் பயன்­ப­டுத்­தி­ய­தாக அவர் விளக்­கி­னார்.

இருப்பினும் ஆறுதல் அடை யாத ராயர், அப்துல் அஸீஸைத் தாக்கிப் பேசினார். மோதல் நிலை உருவானதால் உட்காருமாறு மன்ற நாயகர் கூறியும் பேசிக்கொண்டு இருந்த ராயர் மன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.