மீண்டும் மூவாயிரத்திற்கு இறங்கிய கிருமித்தொற்று

மீண்டும் மூவாயிரத்திற்கு இறங்கிய கிருமித்தொற்று

1 mins read
57abd5cd-ade0-42a5-9afb-8274ffa1ae46
முந்திய நாளைக் காட்டிலும் நேற்று கொரோனா பாதிப்பு 1,892 குறைவு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் 62 முதல் 98 வயதிற்குட்பட்ட மேலும் 15 பேர் கொவிட்-19 தொற்று காரணமாக நேற்று வியாழக்கிழமை (28-10-2021) மாண்டுவிட்டனர். அவர்கள் அனைவர்க்கும் வேறு உடல்நலக் குறைபாடுகளும் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதனையடுத்து, மரணமுற்றோர் எண்ணிக்கை 364 ஆனது.

தொடர்ந்து 39வது நாளாக கொரோனா தொற்றால் மரணம் நிகழ்ந்துள்ளது.

புதிதாக 3,432 பேரை கொரோனா தொற்றியிருப்பதை அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது.

இது, முந்திய நாளைக் காட்டிலும் 1,892 குறைவு. முன்னர் இல்லாத அளவாக நேற்று முன்தினம் 5,324 கொரோனா பாதிப்புகள் பதிவாயின.

புதிதாகத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சமூகத்தில் 3,171 பேரும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 252 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்த ஒன்பது பேரும் அடங்குவர்.

இதனையடுத்து, சிங்கப்பூரில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 187,851 ஆனது.